சித்தாளு
முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்;
இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர்.
மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.
மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.
I. பலவுள் தெரிக.
1. “இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும் …” – இவ்வடிகளில் கற்காலம் என்பது
- தலைவிதி
- பழைய காலம்
- ஏழ்மை
- தலையில் கல் சுமப்பது
விடை : தலையில் கல் சுமப்பது
Question 1.
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
அ) முகம்மதுரஃபி
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது
Answer:
அ) முகம்மதுரஃபி
Question 2.
நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்
அ) மதுரை
ஆ) நெல்லை
இ) தஞ்சை
ஈ) திருச்சி
Answer:
இ) தஞ்சை
Question 3.
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Answer:
ஆ) கணையாழி
Question 4.
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) – ………………..
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Answer:
இ) கப்பலுக்குப் போன மச்சான்
Question 5.
சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ……………………
அ) தலைக்கனம்
ஆ) அடுத்தவர் கனவு
இ) சித்தாளின் மரணம்
ஈ) சித்தாளின் புலம்பல்
Answer:
இ) சித்தாளின் மரணம்
Question 6.
தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது ………………………
அ) கட்டடம்
ஆ) செங்கற்கள்
இ) கம்பிகள்
ஈ) மணல்
Answer:
ஆ) செங்கற்கள்
Question 7.
தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….
அ) சித்தாளு
ஆ) பொறியாளர்
இ) உழவர்
ஈ) காவலர்
Answer:
அ) சித்தாளு
Question 8.
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………………….
அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) கொல்லிப்பாவை
இ) நதியின் கால்கள்
ஈ) மீட்சி
Answer:
இ) நதியின் கால்கள்
Question 9.
இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ……………………
அ) முதலாளிகள்
ஆ) கவிஞர்கள்
இ) மக்கள்
ஈ) அமைச்சர்கள்
Answer:
ஆ) கவிஞர்கள்
Question 10.
தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?
அ) மோனை நயம்
ஆ) எதுகை நயம்
இ) இயைபு
ஈ) உவமை அணி
Answer:
அ) மோனை நயம்
Question 11.
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
அ) நாகூர் ரூமி
ஆ) கண்ணதாசன்
இ) ஜெயகாந்தன்
ஈ) பாரதியார்
Answer:
அ) நாகூர் ரூமி
Question 12.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக.
அ) மீட்சி
ஆ) சுபமங்களா
இ) ஏழாவது சுவை
ஈ) புதியபார்வை
Answer:
இ) ஏழாவது சுவை
Question 13.
நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
அ) கவிதைத் தொகுதி
Question 14.
‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
இ) நாவல்
No comments:
Post a Comment