Wednesday, September 14, 2022

தேம்பாவணி

தேம்பாவணி

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும்,

தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.

கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.

இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட து தேம்பாவணி.

இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.

இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி. 

தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.

இஸ்மத் சன்னியாசிதூய துறவி வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.

இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.

இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.

I. சொல்லும் பொருளும்

  • சேக்கை – படுக்கை
  • யாக்கை – உடல்
  • பிணித்து – கட்டி
  • வாய்ந்த – பயனுள்ள
  • இளங்கூழ் – இளம்பயிர்
  • தயங்கி – அசைந்து
  • காய்ந்தேன் – வருந்தினேன்
  • கொம்பு – கிளை
  • புழை – துளை
  • கான் – காடு
  • தேம்ப – வாட
  • அசும்பு – நிலம்
  • உய்முறை – வாழும் வழி
  • ஓர்ந்து – நினைத்து
  • கடிந்து – விலக்கி
  • உவமணி – மணமலர்
  • படலை – மாலை
  • துணர் – மலர்கள்

II. இலக்கணக் குறிப்பு

  • காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
  • கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
  • காய்மணி – வினைத்தொகை
  • உய்முறை – வினைத்தொகை
  • செய்முறை – வினைத்தொகை
  • மெய்முறை – வேற்றுமைத்தொகை
  •  கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

III. பகுபத உறுப்பிலக்கணம்

1. அறியேன் = அறி + ய் + ஆ + ஏன்

  • அறி – பகுதி
  • ய் – சந்தி
  • ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று

2. ஒலித்து = ஒலி + த் + த் + உ

  • ஒலி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

IV. பலவுள் தெரிக.

பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………….. , ………………….. வேண்டினார்.

  1. கருணையன் எலிசபெத்துக்காக
  2. எலிசபெத் தமக்காக
  3. கருணையன் பூக்களுக்காக
  4. எலிசபெத் பூமிக்காக

விடை : கருணையன் எலிசபெத்துக்காக

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………
அ) பேதுரு
ஆ) ஆபிரகாம்
இ) திருமுழுக்கு யோவான்
ஈ) சூசை
Answer:
இ) திருமுழுக்கு யோவான்

Question 2.
திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………
அ) கருணாகரன்
ஆ) கருணையன்
இ) கருணாமூர்த்தி
ஈ) வலின்
Answer:
ஆ) கருணையன்

Question 3.
கருணையனின் தாயார் யார்?
அ) எலிசபெத்
ஆ) மரியாள்
இ) சாரா
ஈ) அண்ணாள்
Answer:
அ) எலிசபெத்

Question 4.
சொல்லையும் பொருளையும் பொருத்துக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி - 2
அ) 3, 2, 1, 4
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 3, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
ஆ) 4, 1, 2, 3

Question 5.
தேம்பா + அணி என்பதன் பொருள் …………………
அ) வாடாத மாலை
ஆ) சூடாத மாலை
இ) பாடாத மாலை
ஈ) தேன்மாலை
Answer:
அ) வாடாத மாலை

Question 6.
கிறித்துவின் வளர்ப்புத் தந்தை …………………………….
அ) கருணையன்
ஆ) சூசையப்பர்
இ) தாவீது
ஈ) ஈசாக்கு
Answer:
ஆ) சூசையப்பர்

Question 7.
தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் ………………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) மூன்று

Question 8.
தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………………………..
அ) 7ஆம் நூற்றாண்டு
ஆ) 12ஆம் நூற்றாண்டு
இ) 17ஆம் நூற்றாண்டு
ஈ) 19ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 17ஆம் நூற்றாண்டு

Question 9.
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………………..
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Answer:
ஈ) 3615

Question 10.
தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ………………………..
அ) 33
ஆ) 35
இ) 36
ஈ)
Answer:
இ) 36

Question 11.
தேம்பாவணி ஒரு ……………………….. நூல் ஆகும்.
அ) பெருங்காப்பிய
ஆ) புதின
இ) நாடக நூல்
ஈ) வரலாற்று
Answer:
அ) பெருங்காப்பிய

Question 12.
தேம்பாவணியை இயற்றியவர் யார்?
அ) கபிலர்
ஆ) கால்டு வெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) வீரமாமுனிவர்

Question 13.
தமிழ் முதல் அகராதி எது?
அ) சதுரகராதி
ஆ) தமிழ் அகராதி
இ) தொன்மை அகராதி
ஈ) பழைய அகராதி
Answer:
அ) சதுரகராதி

Question 14.
வீரமாமுனிவரின் இயற்பெயர்………………………..ஆகும்.
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
ஆ) தாமஸ் பெஸ்கி
இ) இஸ்மத்
ஈ) கால்டுவெல்
Answer:
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி

Question 15.
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
அ) சாகிப்
ஆ) இஸ்மத்
இ) இஸ்மத் சன்னியாசி
ஈ) சன்னியாசி
Answer:
இ) இஸ்மத் சன்னியாசி

Question 16.
இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ………………
அ) தூயவன்
ஆ) புனிதன்
இ) பெரியோன்
ஈ) தூயதுறவி
Answer:
ஈ) தூயதுறவி

Question 17.
இஸ்மத் சன்னியாசி என்பது ……………… மொழிச் சொல்.
அ) பாரசீக
ஆ) இலத்தீன்
இ) எபிரேய
ஈ) உருது
Answer:
அ) பாரசீக

Question 18.
கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?
அ) எலிசபெத் கூற்று
ஆ) கருணையன் கூற்று
இ) சூசையப்பர் கூற்று
ஈ) தாவீது கூற்று
Answer:
ஆ) கருணையன் கூற்று

Question 19.
பொருத்துக.
1. கூழ் – அ) கிளை
2. கொம்பு – ஆ) பயிர்
3. புழை – இ) காடு
4. கான் – ஈ) துளை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 20.
பொருத்துக.
1. கடிந்து – அ) விலக்கி
2. உவமணி – ஆ) மாலை
3. படலை – இ) மணமலர்
4. துணர் – ஈ) மலர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Question 21.
பொருத்துக.
1. காக்கென்று – அ) இடைக்குறை
2. கணீர் – ஆ) தொகுத்தல் விகாரம்
3. காய்மணி – இ) வேற்றுமைத்தொகை
4. மெய்முறை – ஈ) வினைத்தொகை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) திருமுழுக்கு யோவான்
ஆ) அருளப்பன்
இ) கருணையன்
ஈ) எலிசபெத்
Answer:
ஈ) எலிசபெத்

Question 23.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஈ) இயேசு

Question 24.
‘சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள் ………………
அ) வானம்
ஆ) நிலம்
இ) காடு
ஈ) கிளை
Answer:
ஆ) நிலம்

Question 25.
நவமணி என்பதில் ‘நவம்’ என்ற சொல் குறிப்பது ………………
அ) ஆறு
ஆ) ஒன்பது
இ) பத்து
ஈ) ஐந்து
Answer:
ஆ) ஒன்பது

Question 26.
‘நல்லறப் படலைப் பூட்டும்’ இவ்வடிகளில் ‘படலை’ என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) மாலை
ஆ) மணமலர்
இ) மலர்கள்
ஈ) நிலம்
Answer:
அ) மாலை

Question 27.
கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ………………
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஆ) யோவான்

Question 28.
கருணையன் என்பவர் ………………
அ) வீரமாமுனிவர்
ஆ) யோசேப்பு
இ) அருளப்பன்
ஈ) சாந்தாசாகிப்
Answer:
இ) அருளப்பன்

 

 

 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms