ஜெயகாந்தம் ( நினைவு இதழ்)
ஜெயகாந்தன் பேசி, ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும் ‘யுகசந்தி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன .
தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு.
அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் ‘சிறுகதை மன்னன்’ என்ற பட்டத்தைத் தேடித்தந்தது.
இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்;
தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்;
தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்;
சாகித்திய அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
I. பலவுள் தெரிக.
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
- அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
- பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
- அறிவியல் முன்னேற்றம்
- வெளிநாட்டு முதலீடுகள்
விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் –இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
- தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
- சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
- அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
- அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..
அ) ஜெயகாந்தன்
ஆ) ஜெயமோகன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) ஜெயகாந்தன்
Question 2.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Answer:
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
Question 3.
தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.
அ) வியாசர்
ஆ) கம்பர்
இ) வில்லிபுத்தூரார்
ஈ) பாரதியார்
Answer:
அ) வியாசர்
Question 4.
“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..
அ) அறம், மானம், கல்வி, புகழ்
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், மறம், மானம், புகழ்
ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமை
Answer:
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
Question 5.
கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..
அ) மானுடம்
ஆ) சமூகப்பார்வை
இ) நன்னெறி
ஈ) நாட்டுப்பற்று
Answer:
ஆ) சமூகப்பார்வை
Question 6.
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Answer:
அ) 1934-2015
Question 7.
பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் எது?
அ) உண்மை சுடும்
ஆ) ஒரு கதாசிரியரின் கதை
இ) வாழ்விக்க வந்த காந்தி
ஈ) தேவன் வருவார்
Answer:
இ) வாழ்விக்க வந்த காந்தி
Question 8.
முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..
அ) ஒரு கதாசிரியனின் கதை
ஆ) பிரளயம்
இ) இனிப்பும் கரிப்பும்
ஈ) யுகசந்தி
Answer:
அ) ஒரு கதாசிரியனின் கதை
Question 9.
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Answer:
ஆ) யுகசந்தி
Question 10.
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ……………………..
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஈ) ஜெயகாந்தன்
Question 11.
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Answer:
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Question 12.
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Answer:
ஆ) இமயத்துக்கு அப்பால்
Question 13.
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
Question 14.
சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன
Question 15.
உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது……………………..
அ) குடியரசுத்தலைவர் விருது
ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது
ஈ) தாமரைத் திரு விருது
Answer:
அ) குடியரசுத்தலைவர் விருது
Question 16.
மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.
அ) குருபீடம், யுகசந்தி
ஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்
இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா
ஈ) பிரளயம், கைவிலங்கு
Answer:
ஈ) பிரளயம், கைவிலங்கு)
Question 17.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
அ) குருபீடம்
Question 18.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப் போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஆ) பிரளயம்
Question 19.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Question 20.
பொருத்துக.
1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்
2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்
அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
Question 21.
ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்
இ) ஒருபிடி சோறு
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) ஒருபிடி சோறு
Question 22.
சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
Question 23.
படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
Question 24.
திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
ஆ) யாருக்காக அழுதான்
Question 25.
ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
Question 26.
ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………………..
அ) 1972
ஆ) 1971
இ) 1975
ஈ) 1978
Answer:
அ) 1972
No comments:
Post a Comment