Monday, September 12, 2022

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற் றுள்ளது.

96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.

இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.

பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ்.

பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.

இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.

குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.

இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்;

கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்

பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழங் கு, அம்மானை, ஊசல்

I. சொல்லும் பொருளும்

  • பண்டி – வயிறு
  • அசும்பிய – ஒளிவீசுகிற
  • முச்சி – தலையுச்சிக் காெண்டை

II. இலக்கணக் குறிப்பு

  • குண்டலமும்  குழைகாதும் – எண்ணும்மை
  • ஆடுக – வியங்கோள் வினைமுற்று
  • கட்டிய – பெயரெச்சம்
  • வட்டச் சுட்டி – குறிப்பு பெயரெச்சம்
  • கூடுதல் வினாக்கள்

    I. கோடிட்ட இடங்களை நிரப்புக

    1. சந்தத்துடன் உள்ள பாடலில் _____________ அதிகம் இருக்கும்.

    விடை : உயிர்ப்பு

    2. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் _____________ .

    விடை : குமரகுருபரர்

    3. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் _____________ ஒன்று.

    விடை : 96 வகைச் சிற்றிலக்கியங்களுள்

    4. குமரகுருபரின் காலம் _____________  நூற்றாண்டு ஆகும்

    விடை : 17-ம்

     

 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) குமரகுருபரர்

Question 2.
செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஒன்று
Answer:
அ) இரண்டு

Question 3.
குமரகுருபரரின் காலம்…………… ஆம் நூற்றாண்டு.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
ஆ) 17

Question 4.
குமரகுருபரர் அறிந்திராத மொழியைக் கண்டறிக.
அ) தமிழ்
ஆ) வடமொழி
இ) இந்துஸ்தானி
ஈ) மலையாளம்
Answer:
ஈ) மலையாளம்

Question 5.
குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) கந்தர் கலிவெண்பா
ஆ) நீதிநெறி விளக்கம்
இ) மதுரைக் கலம்பகம்
ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
Answer:
ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

Question 6.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூ ல்களை இயற்றியவர்.
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) ஞானியாரடிகள்
Answer:
அ) குமரகுருபரர்

Question 7.
சிற்றிலக்கியங்களின் வகைகள்……………
அ) 16)
ஆ) 64
இ) 96
ஈ) 108
Answer:
இ) 96

Question 8.
பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் ……………
அ) 8
ஆ) 10
இ) 12
ஈ) 7
Answer:
ஆ) 10

Question 9.
பொருத்திக் காட்டுக :
i) அரை நாண் – 1. தலையில் அணிவது
ii) சுட்டி – 2. காதில் அணிவது
iii) குண்டலம், குழை – 3. நெற்றியில் அணிவது
iv) சூழி – 4. இடையில் அணிவது
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 10.
ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
அ) சிற்றில்
ஆ) சிறுபறை
இ) சிறுதேர்
ஈ) ஊசல்
Answer:
ஈ) ஊசல்

Question 11.
பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
அ) கழங்கு
ஆ) அம்மானை
இ) ஊசல்
ஈ) சிற்றில்
Answer:
ஈ) சிற்றில்

Question 12.
பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் ……………
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 10
Answer:
ஆ) 7

Question 13.
பிள்ளைத் தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் ……………
அ) 6
ஆ) 3
இ) 7
ஈ) 5
Answer:
ஆ) 3

Question 14.
காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாகக் குழந்தை ஆடும் பருவம்
அ) காப்பு
ஆ) செங்கீரை
இ) தால்
ஈ) சப்பாணி
Answer:
ஆ) செங்கீரை

Question 15.
செங்கீரைப் பருவத்தில் குழந்தையின் தலை அசைந்தாடும் மாதம் எது?
அ) 3 – 4
ஆ) 5 – 6
இ) 7 – 8
ஈ) 9 – 10
Answer:
ஆ) 5 – 6

Question 16.
கிண்கிணி என்ற அணிகலன் அணியும் இடம் ……………
அ) காலில்
ஆ) இடையில்
இ) நெற்றியில்
ஈ) காதில்
Answer:
அ) காலில்

Question 17.
குண்டலமும், குழைகாதும், ஆடுக. இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
அ) எண்ணும்மை, வினையெச்சம்
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று
இ) முற்றும்மை, வினையெச்சம்
ஈ) உம்மைத்தொகை, வியங்கோள் வினைமுற்று
Answer:
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று

Question 18.
‘பதிந்து’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ……………
அ) பதி + த்(ந்) + த் + உ
ஆ) பதி + த் + த் + உ
இ) பதி + த் + ந் + உ
ஈ) பதிந்து + உ
Answer:
அ) பதி+த்(ந்)+த்+உ

Question 19.
குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?
அ) சுவாமி மலை முருகன்
ஆ) வைத்தியநாத முருகன்
இ) திருக்கழுக்குன்ற முருகன்
ஈ) திருச்செந்தூர் முருகன்
Answer:
ஆ) வைத்தியநாத முருகன்

Question 20.
“கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட” – என்ற அடிகளில்
இடம்பெற்றுள்ள இலக்கிய நயங்கள் ……………
அ) மோனை, இயைபு
ஆ) மோனை, எதுகை
இ) எதுகை, இயைபு
ஈ) இயைபு, முரண்
Answer:
அ) மோனை, இயைபு

Question 21.
‘சிறு பண்டி சரிந்தாடப்’ என்பதில் ‘பண்டி’ என்பதன் பொருள் ……………
அ) வயிறு
ஆ) பெருக்கம்
இ) தலை
ஈ) சுருக்கம்
Answer:
அ) வயிறு

 

 

 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms