Monday, September 12, 2022

பூத்தொடுத்தல்

பூத்தொடுத்தல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால்
ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால்
ஈ) காம்பு முறிந்தால்
Answer:
ஆ) தளரப் பிணைத்தால்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ________________ மனித வாழ்விற்கு அழகூட்டுபவை

விடை : கலைகள்

2. கவிஞர் உமா மேகஸ்வரி ________________ மாவட்டத்தில் பிறந்தவர்.

விடை : மதுரை

3. கவிஞர் உமா மேகஸ்வரி ________________ வாழ்ந்து வருகிறார்.

விடை : தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்

II. இலக்கணக் குறிப்பு

  • தளர –  பெயரச்சம்
  • இறுக்கி – வினையெச்சம்

III. பகுபத இலக்கணம்

1. இறுக்கி = இறுக்கு + இ

  • இறுக்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2.  சிரிக்கும் = சிரி + க் + க் + உம்

  • சிரி – பகுதி
  • க் -சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று விகுதி

 

 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms