கம்பராமாயணம்
கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
இது ஆறு காண்டங்களை உடையது.
கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
அவற்றுள் அழகுணர்ச்சி மிக்க சில கவிதைகள் பாடப்பகுதியாக அமைந்துள்ளன.
”கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்;
சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்;
திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்;
”விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்பெற்றவர்;
சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
I. பலவுள் தெரிக.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
- நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
- ஊரில் விளைச்சல் இல்லாததால்
- அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
- அங்கு வறுமை இல்லாததால்
விடை : அங்கு வறுமை இல்லாததால்
கூடுதல் வினாக்கள்
Question 1.
பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?
அ) சரயு ஆறு
ஆ) கங்கை ஆறு
இ) நர்மதை ஆறு
ஈ) யமுனை ஆறு
Answer:
அ) சரயு ஆறு
Question 2.
கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?
அ) செண்பகம்
ஆ) கமுகு
இ) குருக்கத்தி
ஈ) கொன்றை
Answer:
இ) குருக்கத்தி
Question 3.
கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?
அ) இராமகாதை
ஆ) இராமாயணம்
இ) கம்பராமாயணம்
ஈ) இராமாவதாரம்
Answer:
ஈ) இராமாவதாரம்
Question 4.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
ஆ) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்
இ) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
Answer:
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
Question 5.
‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் …………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கம்பதாசன்
Answer:
அ) பாரதியார்
Question 6.
கம்பர் பிறந்த ஊர் …………….
அ) திருவழுந்தூர்
ஆ) திருக்கடையூர்
இ) திருவாரூர்
ஈ) திருவெண்காடு
Answer:
அ) திருவழுந்தூர்
Question 7.
கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்…………….
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
Answer:
அ) ஆறு
Question 8.
கம்பர் பிறந்த நாடு …………….
அ) பாண்டிய நாடு
ஆ) சோழ நாடு
இ) சேரநாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
ஆ) சோழ நாடு
Question 9.
சடையப்ப வள்ளலின் ஊர் …………….
அ) தென்காசி
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
இ) திருநெல்வேலி
ஈ) திருவழுந்தூர்
Answer:
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
Question 10.
‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று புகழப்பட்டவர் …………….
அ) புகழேந்தி
ஆ) செயங்கொண்டார்
இ) கம்பர்
ஈ) ஒட்டக்கூத்தர்
Answer:
இ) கம்பர்
Question 11.
கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) சரசுவதி அந்தாதி
ஆ) பதிற்றுப் பந்தாதி
இ) திருக்கை வழக்கம்
ஈ) ஏரெழுபது
Answer:
ஆ) பதிற்றுப் பந்தாதி
Question 12.
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர் …………….
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
Answer:
அ) கம்பர்
Question 13.
உறங்குகின்ற கும்பகன்ன! என்னும் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம் …………….படலம்…………….
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
ஆ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
இ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
Answer:
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
Question 14.
‘தாதுகு சோலைதோறுஞ்’ – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
Answer:
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்]
Question 15.
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது …………….
அ) சரயு
ஆ) யமுனை
இ) பிரம்மபுத்திரா
ஈ) கங்கை
Answer:
அ) சரயு
Question 16.
“தண்டலை மயில்களாட” – என்று இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய
கலை நிகழ்வே நடப்பதால் தோற்றமாகக் கம்பன் எடுத்தியம்பும் காண்டம்…………….
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப்படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
Answer:
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
Question 17.
‘வண்மையில்லை’ என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது…………….
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
ஆ) பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை
இ) அல்வழி நல்வழி அறிதல்
ஈ) இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்
Answer:
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
Question 18.
‘ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவா ரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?’ இப்பாடலில் அமைந்த நயங்கள் யாவை?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை
Question 19.
பொருத்திக் காட்டுக.
i) தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்
ii) தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்
iii) வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்
iv) ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்
அ) 1, 2, 3, 4
இ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 1, 2, 3, 4
No comments:
Post a Comment