Wednesday, September 14, 2022

தமிழாேவியம்

தமிழாேவியம்

ஈரோடு தமிழன்பன் எழுதிய “தமிழோவியம்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது.

இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொளள் அகராதிகள் தேவைப்படுவதில பாடலும் அப்படித்தான்! என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு தமிழன்பன் சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார்

ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார்.

இவரது “வணக்கம் வள்ளுவ” கவிதை நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

“தமிழன்பன் கவிதைகள்” தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.

இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கில் உள்ளிட்ட மொழியில் மொழி பெயர்க்கப்ட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்

இனிமையும் நீர்மையும் தமிெழெனல் ஆகும்

 – பிங்கல நிகண்டு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்

– பாரதியார்

I. இலக்கணக்குறிப்பு

  • எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர்
  • விட்டு விட்டு – அடுக்குத்தொடர்
  • ஏந்தி – வினையெச்சம்
  • காலமும் – முற்றுமரம்

II. பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் – வளர் + ப் + ப் + ஆய்

  • வளர் – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

III. பலவுள் தெரிக

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!……….. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

  1. முரண், எதுகை, இரட்டைத் தொடை
  2. இயைபு, அளபெடை, செந்தொடை
  3. எதுகை, மோனை, இயைபு
  4. மோனை, முரண், அந்தாதி

விடை : எதுகை, மோனை, இயைபு

I. பலவுள் தெரிக

1. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் எனக் கூறும் நூல் _____________

  1. வணக்கம் வள்ளுவ
  2. பிங்கல நிகண்டு
  3. தமிழோவியம்
  4. தமிழன்பன் கவிதைகள்

விடை : பிங்கல நிகண்டு

2. காலம் பிறக்கும் முன் பிறந்தது _____________

  1. தமிழ்
  2. உருது
  3. சமஸ்கிருதம்
  4. மலையாளம்

விடை : தமிழ்

3. உலகத் தாய்மொழி நாள் _____________

  1. மார்ச் 21
  2. ஏப்ரல் 21
  3. பிப்ரவரி 21
  4. ஜனவரி 21

விடை : பிப்ரவரி 21

4. வணக்கம் வள்ளுவ என்ற நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்த ஆண்டு _____________

  1. 2007
  2. 2005
  3. 2006
  4. 2004

விடை : 2004

5. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் _____________

  1. சுரதா
  2. ஜெகதீசன்
  3. சுப்புரத்தினம்
  4. காளமேகம்

விடை : ஜெகதீசன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ________________ ஆட்சி மொழி தமிழ் மொழி

விடை : இலங்கை, சிங்கப்பூரில்

2. பல சமயங்களையும் ஏந்தி வளர்த்தால் தமிழைத் ________________ எனலாம்

விடை : தாய்

3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று ________________  பாடினார்

விடை : பாரதியார்

4. ________________  காலம் பிறக்கும் முன் பிறந்தது

விடை : தமிழ்மாெழி


 

 

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District