திராவிட மொழிக்குடும்பம்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. திராவிட மொழிகளுள் ___________ தமிழ்.
விடை : மூத்த மொழி
2. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவி ___________
விடை : மொழி
3. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் ___________ .
விடை : குமரிலபட்டர்
4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ___________ க்கும் மேற்பட்டது.
விடை : 1300
5. வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும் மொழி ___________
விடை : ஆங்கிலம்
6. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் ___________
விடை : கால்டுவெல்
7. திராவிட மொழிகள் மொத்தம் ________ எனக் கூறுவர்
விடை : 28
8. தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் ___________ கருதப்படுகிறது.
விடை : தாய் மொழியாகக்
9. தமிழ் மொழியில் பழமையான இலக்கண நூல் ___________
விடை : தொல்காப்பியம்
10. மலையாள மொழியில் பழமையான இலக்கண நூல் ___________
விடை : லீலாதிலகம்
II. பொருத்துக
1. தமிழ் | அ. லீலா திலகம் |
2. கன்னடம் | ஆ. ஆந்திர பாஷா பூஷனம் |
3. தெலுங்கு | இ. தொல்காப்பியம் |
4. மலையாளம் | ஈ. கவிராஜ மார்க்கம் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ |
No comments:
Post a Comment