Wednesday, September 14, 2022

தமிழ்விடு தூது

 தமிழ்விடு தூது

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கி வருமாறு” அன்னம் முதல் வண்டு ஈறாய் பத்தையும் தூது விடுவதாகக் “கலிவெண்பா”வால் இயற்றப்படுவதாகும்.

தமிழ்விடு தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.

இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.

தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன

1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.

இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.

I. சொல்லும் பொருளும்

  1. குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
  2. மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
  3. சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
  4. சிந்து – ஒருவகை இசைப்பாடல்
  5. முக்குணம் – மூன்று குணங்கள் (சமத்துவம் – அமைதி, மேன்மை. இராசசம் – போர், தீவிரமான செயல். தாமசம் – சோம்பல், தாழ்மை)
  6. பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதிய பத்துக்குண அணிகள்
  7. வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
  8. வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
  9. ஊனரசம் – குறையுடைய சுவை
  10. நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
  11. வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு

II. இலக்கணக்குறிப்பு

  • முத்திககனி – உருவகம்
  • தெள்ளமுது – பணபுத்தொகை
  • குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
  • நா – ஓரெழுத்து ஒரு மொழி
  • செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத் தொகை
  • சிந்தாமணி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்

III. பகுபத உறுப்பிலக்கணம்

1. கொள்வார் = கொள் + வ் +ஆர்

  • கொள் – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2. உணர்ந்த = உணர் + த்(ந்) + த் +அ

  • உணர் – பகுதி
  • த் – சந்தி
  • த் – ந் ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

IV. பலவுள் தெரிக.

1. தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

  1. தொடர்நிலைச் செய்யுள்
  2. புதுக்கவிதை
  3. சிற்றிலக்கியம்
  4. தனிப்பாடல்

விடை : சிற்றிலக்கியம்

2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

  1. …………….இனம்
  2. வண்ணம் …………….
  3. …………….குணம்
  4. வனப்பு …………….
    1. மூன்று, நூறு, பத்து, எட்டு
    2. எட்டு, நூறு, பத்து, மூன்று
    3. பத்து, நூறு, எட்டு, மூன்று
    4. நூறு, பத்து, எட்டு, மூன்று

விடை : மூன்று, நூறு, பத்து, எட்டு

3. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான
இலக்கணக்குறிப்பு –

  1. வேற்றுமைத்தொகை
  2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  3. பண்புத்தொகை
  4. வினைத்தொகை

விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. _____________ தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று

விடை : தூது

2. _____________ தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.

விடை : 1930-ல் உ.வே.சா.

3. _____________ தமிழ்விடு தூது நூலின் உள்ளன

விடை : 268 கண்ணிகள்

4. நாவின் சுவை _____________

விடை : ஆறு

5. _____________ நூலின் ஆசிரியர் யார் என்று அறிய முடியவில்லை

விடை : தமிழ்விடு தூது

 

 

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District