10th கோபல்லபுரத்து மக்கள்
நூல்வெளி
- கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்.
- ஆசிரியர் தன் சொந்தஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
- இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது.
- இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல்.
- இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
- கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
- இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
- இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன;
- இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
- இவர் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன.
- எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.
முன்தோன்றிய மூத்தகுடி
திருச்சி மாவட்டத்தின் உறையூர்
“கறங்கு இசை விழவின் உறந்தை …..”
அகநானூறு, 4 :14
கரிசல் இலக்கியம்
- கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்.
- காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை ச் சார்ந்து வாழ்கிற மானா வாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
- கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர்.
- கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
- அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக…
பாடப்பகுதியிலுள்ள வட்டார வழக்குச் சொற்களை எழுதுக
- பாச்சல் – பாத்தி
- பதனம் – கவனமாக
- நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
- கடிச்சு குடித்தல் – வாய் வைத்துக் குடித்தல்
- மகுளி – சோற்றுக் கஞ்சி
- வரத்துக்காரன் – புதியவன்
- சடைத்து புளித்து – சலிப்பு
- அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)
- தொலவட்டையில் – தொலைவில்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை ……………………
அ) கோபல்லபுரம்
ஆ) கோபல்லபுரத்துக் கோகிலா
இ) கோபல்லபுரத்து மக்கள்
ஈ) கோபல்ல சுப்பையா
Answer:
இ) கோபல்லபுரத்து மக்கள்
Question 2.
கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்……………………
அ) கி. ராஜநாராயணன்
ஆ) இந்திரா பார்த்தசாரதி
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
அ) கி. ராஜநாராயணன்
Question 3.
உறையூர் உள்ள மாவட்டம் ……………………
அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) கரூர்
ஈ) பெரம்பலூர்
Answer:
அ) திருச்சி
Question 4.
கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) கலித்தொகை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) அகநானூறு
Question 5.
கி. ராஜநாராயணின் சொந்த ஊர் ……………………
அ) கோபல்லபுரம்
ஆ) இடைசெவல்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்
Answer:
ஆ) இடைசெவல்
Question 6.
இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி எழுதப்பட்டுள்ள நூல் கால்……………………
அ) கோபல்லபுரத்து மக்கள்
ஆ) பால்மரக்காட்டினிலே
இ) சட்டை
ஈ) சித்தன் போக்கு
Answer:
அ) கோபல்லபுரத்து மக்கள்
Question 7.
எப்போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல்?
அ) விடுதலைப்
ஆ) விவசாயிகளின்
இ) நெசவாளர்களின்
ஈ) தொழிலாளர்களின்
Answer:
அ) விடுதலைப்
Question 8.
கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற ஆண்டு ……………………
அ) 1988
ஆ) 1991
இ) 1994
ஈ) 1996
Answer:
ஆ) 1991
Question 9.
எழுத்துலகில் கி.ரா. என்றழைக்கப்படுபவர்……………………
அ) கி. ராஜமாணிக்கம்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) கி. ராசரத்தினம்
ஈ) கி. ராசதுரை
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்
Question 10.
கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர்……………………
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) முத்துலிங்கம் ஈ) அகிலன்
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்
Question 11.
வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகள் எவ்விலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன?
அ) நாஞ்சில்
ஆ) கொங்கு
இ) கரிசல்
ஈ) நெய்தல்
Answer:
இ) கரிசல்
Question 12.
வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகளைத் தொடங்கியவர் ……………………
அ) அகிலன்
ஆ) இந்திரா பார்த்தசாரதி
இ) நாஞ்சில்நாடன்
ஈ) கி.ராஜநாராயணன்
Answer:
ஈ) கி.ராஜநாராயணன்
Question 13.
கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்……………………
அ) கரிசல் இலக்கியம்
ஆ) நாஞ்சில் இலக்கியம்
இ) புதுக்கவிதை
Answer:
அ) கரிசல் இலக்கியம்
Question 14.
கி. ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய கரிசல் மண்ணின் படைப்பாளி ……………………
அ) கு. அழகிரிசாமி
ஆ) பூமணி
இ) பா. செயப்பிரகாசம்
ஈ) சோ. தர்மன்
Answer:
அ) கு. அழகிரிசாமி
Question 15.
கரிசல் இலக்கியப் பரம்பரைக்குத் தொடர்பில்லாதவரைக் கண்டறி.
அ) பூமணி
ஆ) வீரவேலுசாமி
இ) வேலராம மூர்த்தி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
ஈ) ந. பிச்சமூர்த்தி
Question 16.
வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக.
i) பாச்சல் – 1. சோற்றுக்கஞ்சி
ii) பதனம் – 2. மேல்கஞ்சி
iii) நீத்துப்பாகம் – 3. கவனமாக
iv) மகுளி – 4. பாத்தி
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 4, 3, 2, 1
Question 17.
வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக.
i) வரத்துக்காரன் – 1. புதியவன்
ii) சடைத்து புளித்து – 2. சலிப்பு
iii) அலுக்கம் – 3. அழுத்தம்
iv) தொலவட்டையில் – 4. தொலைவில்
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 2, 1, 4, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
ஆ) 1, 2, 3, 4
Question 18.
காய்ந்தும் கெடுக்கிற பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற
மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் ……………………
அ) கரிசல் இலக்கியங்கள்
ஆ) நெய்தல் இலக்கியங்கள்
இ) கொங்கு இலக்கியங்கள்
ஈ) புதினங்கள்
Answer:
அ) கரிசல் இலக்கியங்கள்
No comments:
Post a Comment