Sunday, September 11, 2022

10th தொகாநிலைத் தொடர்கள்

 தொகாநிலைத் தொடர்கள்

. பலவுள் தெரிக.

“அறிஞருக்கு நூல்”, “அறிஞரது நூல்”ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

  1. வேற்றுமை உருபு
  2. எழுவாய்
  3. உவம உருபு
  4. உரிச்சொல்

விடை : வேற்றுமை உருபு

கற்பவை கற்றபின்

1. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவர் அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பால்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

  1. இறங்கினார் முகமது – வினைமுற்றுத்தொடர்
  2. அவர் பாடகர் – எழுவாய்த்தொடர்
  3. பாடுவதும் கேட்பதும் – உம்மைத்தொகை
  4. கேட்ட பாடல் – உரிச்சொல்தொடர்
  5. அடுக்கு அடுக்காக- அடுக்குத்தொடர்

2. வண்ண சொற்களின் தொடர்வகைகளை  எழுதுக

1. பழகப் பழகப் பாலும் புளிக்கும்

  • பழகப் பழகப் – அடுக்குத் தொடர்

2. வடித்த கஞ்சியில் சீலையை அலசினேன்

  • வடித்த கஞ்சியில் – வினையெச்சத் தொடர்

3. மேடையில் நன்றாகப் பேசினான்

  • நன்றாகப் பேசினான் – உரிச்சொல் தொடர்

4. வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்

  • வந்தார் – வினைமுற்றுத் தொடர்

5. அரிய கவிதைகளின் தொகுப்பு

கவிதைகளின் – உரிச்சொல்தொடர்

கலைச்சொல் அறிவோம்

  1. செவ்விலக்கியம் – classical literature
  2. காப்பிய இலக்கியம் – Epic literature
  3. பக்தி இலக்கியம் – Devotional literature
  4. பண்டைய இலக்கியம் – Ancient literature
  5. வட்டார இலக்கியம் – Regional literature
  6. நாட்டுப்புற இலக்கியம் – Folk literature
  7. நவீன இலக்கியம் – Modern literature

அறிவை விரிவு செய்

  • திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்
  • சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன்
  • ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்
  • பலவுள் தெரிக

    Question 1.
    கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
    அ) காவிரி பாய்ந்தது – எழுவாய்த் தொடர்
    ஆ) பாடினாள் கண்ணகி – வினைமுற்றுத் தொடர்
    இ) நண்பா எழுது – விளித்தொடர்
    ஈ) பாடி மகிழ்ந்த னர் – பெயரெச்சத்தொடர்
    Answer:
    ஈ) பாடி மகிழ்ந்தனர் – பெயரெச்சத்தொடர்

    Question 2.
    சரியான வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுது.
    i) பாடத்தைப் படித்தாள் – 1. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    ii) இசையால் ஈர்த்தார் – 2. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    iii) கயல்விழிக்குப் பரிசு – 3. ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    iv) முருகனின் சட்டை – 4. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    அ) 1, 2, 3, 4
    ஆ) 2, 1, 4, 3
    இ) 1, 2, 4, 3
    ஈ) 4, 3, 2, 1
    Answer:
    இ) 1, 2, 4, 3

    Question 3.
    ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது……………………………
    அ) தொகை நிலைத்தொடர்
    ஆ) தொகாநிலைத்தொடர்
    இ) மரபுத்தொடர்
    ஈ) உவமைத்தொடர்
    Answer:
    ஆ) தொகாநிலைத்தொடர்

    Question 4.
    தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………
    அ) 6
    ஆ) 7
    இ) 8
    ஈ) 9
    Answer:
    ஈ) 9

    Question 5.
    விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?
    அ) பெயர்
    ஆ) வினா
    இ) வினை
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    Answer:
    இ) வினை

    Question 6.
    வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது……………………………
    அ) எழுவாய்த்தொடர்
    ஆ) விளித்தொடர்
    இ) வினையெச்சத்தொடர்
    ஈ) வினைமுற்றுத்தொடர்
    Answer:
    ஈ) வினைமுற்றுத்தொடர்

    Question 7.
    முற்றுப் பெறாத……………………………பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
    அ) வினா
    ஆ) எழுவாய்
    இ) வினை
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    Answer:
    இ) வினை

    Question 8.
    ……………………………உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
    அ) உவம்
    ஆ) வேற்றுமை
    இ) பண்பு
    ஈ) வினை
    Answer:
    ஆ) வேற்றுமை

    Question 9.
    பொருத்திக் காட்டுக.
    i) கட்டுரையைப் படித்தாள் – 1. உரிச்சொல் தொடர்
    ii) அன்பால் கட்டினார் – 2. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
    iii) அறிஞருக்குப் பொன்னாடை – 3. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
    iv) சாலச் சிறந்தது – 4. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
    அ) 4, 3, 2, 1
    ஆ) 3, 4, 1, 2
    இ) 2, 3, 1, 4
    ஈ) 4, 2, 3, 1
    Answer:
    அ) 4, 3, 2, 1

    Question 10.
    பொருத்திக் காட்டுக.
    i) காவிரி பாய்ந்தது – 1. வினையெச்சத்தொடர்
    ii) நண்பா எழுது – 2. பெயரெச்சத்தொடர்
    iii) கேட்ட பாடல் – 3. எழுவாய்த்தொடர்
    iv) பாடி மகிழ்ந்த னர் – 4. விளித்தொடர்
    அ) 3, 4, 2, 1
    ஆ) 2, 1, 4, 3
    இ) 4, 3, 2, 1
    ஈ) 3, 2, 1, 4
    Answer:
    அ) 3, 4, 2, 1

    Question 11.
    இடைச்சொல் தொடரில் இடைச்சொல்லுடன் தொடர்வது……………………………
    அ) பெயர், வினை
    ஆ) வினா, விடை
    இ) பெயர், வினா
    ஈ) வினை, வினா
    Answer:
    அ) பெயர், வினை

    Question 12.
    மற்றொன்று என்பது……………………………
    அ) வினையெச்சத்தொடர்
    ஆ) வினைமுற்றுத்தொடர்
    இ) இடைச்சொல் தொடர்
    ஈ) உரிச்சொல் தொடர்
    Answer:
    இ) இடைச்சொல் தொடர்

    Question 13.
    ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது……………………………
    அ) இரட்டைக்கிளவி
    ஆ) அடுக்குத்தொடர்
    இ) இரட்டுறமொழிதல்
    ஈ) உரிச்சொல் தொடர்
    Answer:
    ஆ) அடுக்குத்தொடர்]

    Question 14.
    கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி ஆகியன……………………………
    அ) பெயரெச்சங்கள்
    ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்
    இ) கூட்டுநிலை வினையெச்சங்கள்
    ஈ) வினையெச்சங்கள்
    Answer:
    ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்

    Question 15.
    அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
    அ) வேற்றுமை உருபு
    ஆ) எழுவாய்
    இ) உவம உருபு
    ஈ) உரிச்சொல்
    Answer:
    அ) வேற்றுமை உருபு

     

 

 

 

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District