Sunday, September 11, 2022

10th மலைபடுகடாம்

 மலைபடுகடாம் 

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.

583 அடிகளை கொண்டது.

கூத்தராற்றுப்படை என அழைக்கப்படுகிறது.

மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.

நன்னன் என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவனாக கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார் பாடியது மலைபடுகடாம்.

ஆற்றுப்படை

ஆற்றப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்ற வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.

I. சொல்லும் பொருளும்

  • அசைஇ – இளைப்பாறி
  • அல்கி – தங்கி
  • கடும்பு – சுற்றம்
  • நரலும் – ஒலிக்கும்
  • ஆரி – அருமை
  • படுகர் – பள்ளம்
  • வயிரியம் – கூத்தர்
  • வேவை – வெந்தது
  • இறடி – திசை,
  • பொம்மல் – சோறு

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. மலைந்து = மலை + த் (ந்) + த் + உ

  • மலை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. பொழிந்த = பொழி + த் (ந்) + த் + உ

  • பொழி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

III. இலக்கணக் குறிப்பு

  • கெழீஇ, அசைஇ – சொல்லிசை அளபெடை
  • குரூஉக்கண், பரூஉக் – செய்யுளிசை அளபெடை

IV. பலவுள் தெரிக.

“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது-

  1. புத்தூர்
  2. மூதூர்
  3. பேரூர்
  4. சிற்றூர்

விடை : பேரூர்

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ______________ கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கமாகும்

விடை : கம்பு

2. மலைபடுகடாம் ______________ நூல்களுள் ஒன்று.

விடை : பத்துபாட்டு

3. மலைபடுகடாம் நூலை ______________  எனவும் அழைக்கின்றனர்.

விடை : கூத்தராற்றுப்படை

4. நன்னன் என்னும் குறுநில மன்னன் மலைபடுகடாம் நூலின் ______________  ஆவான்.

விடை : பாட்டுடைத் தலைவன்

5. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் ______________ மலைபடுகடாம் நூலை பாடியுள்ளார்.

விடை : பெருங்கெளசிகனார்

6. நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்றவர் ______________ 

விடை : கூத்தர்

 

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) அசைஇ – 1. சுற்றம்
ii) அல்கி – 2. கன்றின் நெருப்பு
iii) கன்று எரி – 3. இளைப்பாறி
iv) கடும்பு – 4. தங்கி
அ) 3, 4, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 1, 2, 3, 4,
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 3, 4, 2, 1

Question 2.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) ஆரி – 1. பள்ள ம்
ii) நரலும் – 2. கூத்தர்
ii) படுகர் – 3. அருமை
iv) வயிரியம் – 4. ஒலிக்கும்
அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
ஆ) 3, 4, 1, 2

Question 3.
பொருந்தாத பொருளுக்கான இணை எது?
அ) வேவை – வெந்தது
ஆ) இறடி – தினை
இ) பொம்மல் – சோறு
ஈ) நரலும் – சுற்றம்
Answer:
ஈ) நரலும் – சுற்றம்

Question 4.
மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
ஆ) பத்துப்பாட்டு

Question 5.
மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?
அ) 483
ஆ) 543
இ) 583
ஈ) 643
Answer:
இ) 583

Question 6.
மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) விறலியாற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
ஈ) கூத்தராற்றுப்படை

Question 7.
மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது
அ) யானை
ஆ) மேகம்
இ) மான்
ஈ) வானம்
Answer:
அ) யானை

Question 8.
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெருங்கௌசிகனார்
இ) மருதனார்
ஈ) நக்கீரர்
Answer:
ஆ) பெருங்கௌசிகனார்

Question 9.
‘மலைந்து’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) மலைந்து+உ
ஆ) மலைந்+த்+உ
இ) மலை +த்(ந்)+த்+உ
ஈ) மலை +த்+த்+உ
Answer:
இ) மலை +த்(ந்)+த்+உ

Question 10.
‘பொழிந்த’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) பொழிந்து+அ)
ஆ) பொழி+த்+த்+உ
இ) பொழி+த்+ந்+த்+அ
ஈ) பொழி+த்(ந்)+த்+அ
Answer:
ஈ) பொழி+த்(ந்)+த்+அ

Question 11.
பொருந்தாததைக் கண்டறிக.
அ) திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
ஆ) சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
இ) பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Answer:
ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ண னார்

Question 12.
அன்று அவண் அசைஇ – என்பதில் ‘அசைஇ’ என்பதன் பொருள்
அ) அசைவாடிய
ஆ) இளைப்பாறி
இ) அமைதியாகி
ஈ) இன்பமாகி
Answer:
ஆ) இளைப்பாறி

Question 13.
கன்று எரி – என்பதில் ‘எரி’ எனக் குறிப்பிடப்படுவது
அ) நெருப்பு
ஆ) கொம்பு
இ) வால்
ஈ) நீர்
Answer:
அ) நெருப்பு

Question 14.
அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
அ) கரும்
ஆ) சிவந்த
இ) வெண்மையான
ஈ) நீலநிற
Answer:
ஆ) சிவந்த

Question 15.
அல்கி என்பதன் பொருள்
அ) அழிந்து
ஆ) தங்கி
இ) உள்ளே
ஈ) வெளியே
Answer:
ஆ) தங்கி

Question 16.
பொருத்துக.
1. இறடி – அ) தங்கி
2. அல்கி – ஆ) பள்ளம்
3. படுகர் – இ) வெந்து
4. வேவை – ஈ) தினை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ)

Question 17.
கூத்தராற்றுப்படை என்றழைக்கப்படும் நூல்
அ) திருமுருகாற்றுப்படை
ஆ) மலைபடுகடாம்
இ) பொருநராற்றுப்படை
ஈ) சிறுபாணாற்றுப்படை
Answer:
ஆ) மலைபடுகடாம்

Question 18.
நன்னன் எந்நில மன்னன்?
அ) பெருநில
ஆ) குறுநில
இ) சிறுநில
ஈ) மா
Answer:
ஆ) குறுநில

Question 19.
மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
அ) நன்ன ன்
ஆ) பாரி
இ) கபிலர்
ஈ) பெருங்கௌசிகனார்
Answer:
அ) நன்னன்

 

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District