காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள்,
மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.
‘இல்லொழுக்கங் கூறிய’ பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.
முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்கா ண்டம்.
இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.
நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.
“ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பிலா க் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்ன ம்
முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியி னோடு
கடும்பசி ஆகும் தானே”
-விவேகசிந்தாமணி. (4) I. சொல்லும் பொருளும்
- அருகுறை – அருகில்
- முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
II. பகுபத உறுப்பிலக்கணம்
1. உரைத்த – உரை + த் + த் +அ
- உரை – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்த கால இடைநிலை
- அ – பெயரச்ச விகுதி
2. வருக – வா(வரு) + க
- வா – பகுதி
- வரு – எனக் குறுகியத விகாரம்
- க – வியங்கோள் வினைமுற்று விகுதி
III. இலக்கணக் குறிப்பு
- நன்மொழி – பண்புத்தொகை
- வியத்தல், நோக்கம், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்
IV. பலவுள் தெரிக.
காசிக்காண்டம் என்பது –
- காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
- காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
- காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
- காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
விடை : காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. காசி நகரத்தின் பெருமைகளை கூறும் நூல் ____________ ஆகும்.
விடை :காசிக்காண்டம்
2. ____________ என்று அழைக்கப்படுபவர் அதிவீரராம பாண்டியர் ஆவார்
விடை : சீவலமாறன்
3. ____________ சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
விடை : நறுந்தொகை
4. அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர் ____________
விடை : சீவலமாறன்
5. ____________ என்னும் நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர்.
விடை : வெற்றிவேற்கை Question 1.
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? அ) துளசிதாசர்
ஆ) அதிவீரராம பாண்டியர்
இ) ஔவையார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) அதிவீரராம பாண்டியர்
Question 2.
காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?
அ) பதினான்காவது
ஆ) பதினாறாவது
இ) பதின்மூன்றாவது
ஈ) பதினேழாவது
Answer:
ஈ) பதினேழாவது
Question 3.
முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கிள்ளிவளவன்
இ) செங்குட்டுவன்
ஈ) இரண்டாம் புலிகேசி
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
Question 4.
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
அ) சீவலபேரி பாண்டி
ஆ) சீவலமாறன்
இ) மாறவர்மன்
ஈ) மாறன்வழுதி
Answer:
ஆ) சீவலமாறன்
Question 5.
அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) வாயு சம்கிதை
இ) திருக்கருவை அந்தாதி
ஈ) சடகோபர் அந்தாதி
Answer:
ஈ) சடகோபர் அந்தாதி
Question 6.
பொருத்திக் காட்டுக.
i) நன்மொழி – 1. பெயரெச்சம்
ii) வியத்தல் – 2. வியங்கோள் வினைமுற்று
iii) வருக – 3. தொழிற்பெயர்
iv) உரைத்த – 4. பண்புத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1
Question 7.
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?
அ) சீவக சிந்தாமணி
ஆ) விவேக சிந்தாமணி
இ) மணிமேகலை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) விவேக சிந்தாமணி
Question 8.
‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?
அ) அருகில்
ஆ) தொலைவில்
இ) அழிவில்
ஈ) அழுகிய
Answer:
அ) அருகில்
Question 9.
முகமன் எனப்படுவது ……………………
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
ஆ) ஒருவரை எதிர்த்துப் பேசும் சொற்கள்
இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும் சொற்கள்
ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்
Answer:
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
Question 10.
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) ஆறு
ஈ) பத்து
Answer:
ஆ) ஒன்பது
Question 11.
வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
Question 12.
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
Question 13.
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) கொன்றைவேந்தன்
ஆ) காசிக்கலம்பகம்
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
இ) வெற்றிவேற்கை
Question 14.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) விவேகசிந்தாமணி
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
ஆ) விவேகசிந்தாமணி |
No comments:
Post a Comment