Sunday, September 11, 2022

10th விருந்து போற்றதும்

விருந்து போற்றதும்

I. பலவுள் தெரிக.

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் –

  1. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

  2. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

  3. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

  4. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

2. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –

  1. நிலத்திற்கேற்ற விருந்து

  2. இன்மையிலும் விருந்து

  3. அல்லிலும் விருந்து

  4. உற்றாரின் விருந்து

விடை : இன்மையிலும் விருந்து

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழர் பண்பாட்டில் ____________ க்குத் தனித்த இடமுண்டு.

விடை : வாழை இலை

2. அமெரிக்காவின் மினசோட்டோ தமிழ்ச் சங்கம் ____________ வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

விடை : வாழையிலை விருந்து விழா

3. திருவள்ளுவர் ____________ ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்.

விடை : இல்லறவியலில்

4. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி ____________ குறிப்பிடுகிறது.

விடை : பெரியுராணம்

5. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர் ____________

விடை :  திருக்குறள்

6. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ____________ பண்பின் அடிப்படை

விடை : விருந்தோம்பல்

7. விருந்தோம்பல் என்பது ____________

விடை : பெண்களின் சிறந்த பண்பு

பலவுள் தெரிக

Question 1.
வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்
ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்
iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்
iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 2
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஈ) 3, 4, 2, 1

Question 2.
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
அ) அமெரிக்கா
ஆ) இலங்கை
இ) மொரிசியஸ்
ஈ) மலேசியா
Answer:
அ) அமெரிக்கா

Question 3.
தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்?
அ) தொன்மை
ஆ) புதுமை
இ) இளமை
ஈ) முதுமை
Answer:
ஆ) புதுமை

Question 4.
“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
அ) கம்பராமாயணம், சீதை
ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி
இ) நளவெண்பா , தமயந்தி
ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை
Answer:
ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி

Question 5.
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) பெரிய புராணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) கம்பராமாயணம்

Question 6.
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) நற்றிணை
ஈ) புறநானூறு
Answer:
இ) நற்றிணை

Question 7.
‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) பொருநராற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
இ) பொருநராற்றுப்படை

Question 8.
“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) கலிங்கத்துப்பரணி
இ) முக்கூடற்பள்ளு
ஈ) பெரியபுராணம்
Answer:
ஆ) கலிங்கத்துப்பரணி

Question 9.
“குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து?
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
ஆ) உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்குத் தலைவனிடம் தந்தாள் தலைவி.
இ) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத் தந்தாள் தலைவி.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.

Question 10.
தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
ஆ) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
இ) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
ஈ) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
Answer:
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

Question 11.
அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
அ) சாக்கியநாயனார், பெரிய புராணம்
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்
இ) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி
ஈ) சுந்தரர், திருத்தொண்டத்தொகை
Answer:
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்



Question 12.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
அ) குழல் மீன் கறியும் பிறவும்
ஆ) ஆரல் மீன் கறியும் உப்பும்
இ) உப்பும் முத்தும் ஈ) மீன் கறியும் நண்டும்
Answer:
அ) குழல் மீன் கறியும் பிறவும்

Question 13.
“இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?
அ) அம்சப்பிரியா
ஆ) பா.விஜய்
இ) சிநேகன்
ஈ) நா. முத்துக்குமார்
Answer:
அ) அம்சப்பிரியா

Question 14.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) குறுந்தொகை

Question 15.
“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) ஔவையார், ஆத்திச்சூடி
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்
இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்
ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்
Answer:
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

Question 16.
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
அ) வாழையிலை விருந்து விழா
ஆ) இறைச்சி உணவு விருந்து விழா
இ) வேட்டி சேலை உடுத்தும் விழா
ஈ) நவதானிய விழா
Answer:
அ) வாழையிலை விருந்து விழா



Question 17.
திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்
அ) இல்லறவியல்
ஆ) பாயிரவியல்
இ) அரசியல்
ஈ) துறவறவியல்
Answer:
அ) இல்லறவியல்

Question 18.
விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.
அ) திருவள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
இ) இளங்கோவடிகள்

Question 19.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்
அ) கம்பர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) கம்பர்

Question 20.
இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?
அ) பெரிய புராணம்
ஆ) நற்றிணை
இ) பொருநராற்றுப் படை
ஈ) கம்பராமாயணம்
Answer:
அ) பெரிய புராணம்

Question 21.
பொருத்துக.
1. விருந்தே புதுமை – அ) திருவள்ளுவர்
2. மோப்பக் குழையும் அனிச்சம் – ஆ)தொல்காப்பியர்
3. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் – இ) இளங்கோவடிகள்
4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – ஈ) ஔவையார்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்
அ) சிதம்பரம்
ஆ) மதுரை
இ) மாமல்லபுரம்
ஈ) திருச்சி
Answer:
அ) சிதம்பரம்

Question 23.
விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர்
அ) ஒளவையார்
ஆ) திருவள்ளுவர்
இ) கபிலர்
ஈ) கம்பர்
Answer:
ஆ) திருவள்ளுவர்

Question 24.
“காலின் ஏழடிப் பின் சென்று” – என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி
அ) விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.
இ) எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.
ஈ) ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்.
Answer:
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.

Question 25.
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்
ஈ) திருவள்ளுவர்
Answer:
அ) ஒளவையார்



 

No comments:

Post a Comment

The Aged Mother -PPT

  The Aged Mother -PPT