Wednesday, August 25, 2021

SAT- 8th Science - 8. அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

 

8. அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

 1. சூரிய குடும்பம் - சூரியனும் அதனைச் சுற்றிவரும் வான் பொருட்களும்

சேர்ந்தது.

2. கவர்ச்சி விசையினால் பிணைக்கப்பட்ட இலட்சக்கணக்கான விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள்.

3. தீ அம்புகள் - ஆரம்ப காலத்தில் மரக்குழாய் வெடிமருந்து நிரப்பப்பட்டு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன. இவை போரிடுவதற்காக சீனர்கள் பயன்படுத்தினர்.

4. ராக்கெட்டின் கட்டமைப்பிற்கு பயன்படுவது டைட்டானியம் (அ) அலுமினியம். 

5. பணிச்சுமை சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்படுவதற்காக ராக்கெட்டினால்

சுமந்து செல்லப்படும் செயற்கைக்கோள். 

6. வழிகாட்டு அமைப்பு - ராக்கெட் செல்ல வேண்டிய பாதை குறிக்கிறது. 

7. ராக்கெட்டிலுள்ள பெரும்பகுதி இடத்தை எடுத்துக்கொள்ளும் அமைப்பு

உந்துவிசை அமைப்பு.

8. உந்துவிசை அமைப்பு வகைகள் திரவ உந்துவிசை அமைப்பு திட உந்துவிசை அமைப்பு.

9. PSLV - துருவ துணைக்கோள் செலுத்தும் வாகனம்.

10. GSLV - புவி நிலைத் துணைக்கோள் செலுத்தும் வாகனம். 

11. இயக்கு பொருள் - வேதிப்பொருள்.

12. திரவ எரிபொருள் - திரவ ஹைட்ரஜன், ஹைட்ரசீன், எத்தில் ஆல்கஹால். 

13. ராக்கெட்டுகளில் பயன்படும் திண்ம எரிபொருள் - பாலியூரித்தின், பாலி பியூட்டாடையின்.

14. கிரையோஜெனிக் இயக்கு பொருட்கள் தாழ் வெப்பநிலை இயக்கு பொருட்கள்.

15. ராக்கெட் இயக்கம் நியூட்டனின் 3ஆம் விதிப்படி. 

16. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 1969

17. முதல் செயற்கைக் கோள் 1975 ஆரியபட்டா. 

18. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் - ராகேஷ் சர்மா 1984. 

19. சந்திராயன் 1 சந்திரனைப் பற்றிய ஆய்வு 2008 அக் 22 ஆந்திரா -

ஸ்ரீஹரிகோட்டா

20. சந்திராயன் 1 312 நாட்கள் 2009 ஆகஸ்ட் 24 ஆம் நாள் - பூமியில் -

கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை துண்டித்தது. 

21. சந்திராயன் 1ன் நோக்கம்

  • சந்திரனில் நீர் உள்ளதா? 
  • சந்திரனில் உள்ள தனிமங்களைக் கண்டறிய 
  • ஹீலியம் - 3 இருப்பதை ஆராய ச
  • ந்திரனின் முப்பரிமாண வரைபடம் உருவாக்குதல் 
  • சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்தல்.

22. கலாம் சாட் - 

  • மிகச்சிறிய செயற்கைக்கோள் 
  • 64 கிராம் - 
  • கரூர் பள்ளபட்டி ரிபாத் ஷாருக் - 
  • 18 வயது பள்ளி மாணவன் 
  • 2017 ஜீன் 22 ஆம் நாள் - நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

23. சந்திராயன் 1ன் திட்ட இயக்குநர் - மயில்சாமி அண்ணாதுரை. 

24. சந்திராயன் 1 X கதிர் படக்கருவியின் மூலம் அலுமினியம் மெக்னீசியம்

மற்றும் சிலிக்கான் இருப்பது கண்டறியப்பட்டது.

25. சந்திராயன் 1- புகைப்படக்கருவி மூலம் 75 நாட்களில் 40000 மேற்பட்ட படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பப்பட்டன. 

26. மங்கள்யான் - செவ்வாய் வாகனம்.

27. மங்கள்யான் - PSLV ராக்கெட் - 2013 நவம்பர் 5 ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா.

28. சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்துள்ள கோள் செவ்வாய்

29. இரண்டாவது சிறிய கோள் செவ்வாய்.

30. செவ்வாய் சிவப்புநிறக்காரணம் மேற்பரப்பிலுள்ள இரும்பு ஆக்ஸைடு மற்றும் வளிமண்டல துாசுகள்.

31. செவ்வாய் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு - இந்தியா

32. சந்திராயன் 2 2019 ஜீலை 22.

33. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை

டாக்டர் விக்ரம் சாராபாய்.

34. இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தின் தற்போதைய தலைவர் கைலாசம் வடிவு சிவன் - ராக்கெட் மனிதர் - ஒரே நேரத்தில் 104 செயற்கை கோள்களை இஸ்ரோ செலுத்தியது.

35. உலவி (Rover)- அறிவு

36. பூமியின் ஒரே இயற்கைத்துணைக்கோள் - நிலா

37. பூமியிலிருந்து நிலா சுமார் 3,84,400 கிமீ தொலைவில் உள்ளது. 

38. சந்திரனில் வளிமண்டலம் இல்லை. 

39. நாம் எப்போதும் சந்திரனின் ஒரு பகுதியையே பார்க்கிறோம் காரணம் சந்திரன் தன்னைத்தானே சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலமும் பூமியைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலமும் சமமாக இருப்பதால் . 

40. அமேரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா 1958 அக்டோபர் 1. 

41. நாசாவின் மிகப் புகழ் பெற்ற திட்டம் - அப்பல்லோ விண்வெளி திட்டம். 

42. நாசாவின் அப்பல்லோ -8 திட்டமே முதன் முதலில் மனிதனை நிலவிற்கு

தரையிறங்க செய்த திட்டம் ஆகும்.

43. நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலில் நிலவின் மேற்பரப்பில் காலடி வைத்த ஆண்டு 1969.

44. சந்திரனில் தரையிரங்கிய அப்பல்லோ -11 விண்கலத்தில் பயணித்தவர் நீல்

ஆம்ஸ்ட்ராங் புஷ் ஆல்ட்ரின் மைக்கல் காலின்ஸ். 

45. NISAR - NASA , ISRO Synthetic Aperture Radar.

செவ்வாய் கோளைப்பற்றி ஆராய.

46. விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனை கல்பனா சாவ்லா

கொலம்பியா விண்வெளி திட்டம் - 1997 -நாசா. 

47. கல்பனா சாவ்லா 10.4 மில்லியன் மைல்கள் பயணம் செய்துள்ளார்.-
372 மணிநேரம் மேலாக விண்வெளியில் தங்கி இருந்தார். 

48. விண்வெளியில் நீண்ட தூரம் நடந்த பெண் சுனிதா வில்லியம்ஸ் 50 மணிநேரம் 40 நிமிடம் - 7 விண்வெளிப் பயணங்கள் நாசாவில் பணிபுரிபவர். 

49. ISRO - Indian Space Research Organisation.

50. NASA - National Aeronautics and Space Administration. .

51. அப்பல்லோ -11 முதன் முதலில் மனிதன் நிலவில் தரையிறங்க செய்த திட்டம் 

52. கிரையோஜெனிக் மிகக் குறைந்த வெப்பநிலை பற்றிய அறிவியல். 

53. அப்பல்லோ -8 முதன் முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பிய திட்டம். -

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms