10. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
1. பிரைன் கரைசல் என்பது அடர் சோடியம் குளோரைடு கரைசல் ஆகும்.
2. மின்னாற்பகுத்தல் என்ற சொல் மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. வளிமண்டலத்தில் ஓசோன் மூலக்கூறு காணப்படும் அடுக்கு ஸ்ரேட்டோஸ்பியர் ஆகும்.
4. தீக்குச்சியின் தலைப்பகுதியில் காணப்படும் வேதிப்பொருள் சிவப்பு பாஸ்பரஸ்.
5. தீப்பெட்டியின் பக்கவாட்டில் சிவப்பு பாஸ்பரஸ் உள்ளது.
6. நொதித்தலுக்கு காரணமான நுண்ணுயிரிகள் ஈஸ்ட் மற்றும் பாக்டிரியா.
7. ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்கும் முறையில் இரும்பு வினைவேக மாற்றியாக பயன்படுகிறது.
8. வனஸ்பதி (டால்டா) தயாரித்தலில் துாளாக்கப்பட்ட நிக்கல் வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
9. உணவின் தரம் குறைய என்சைம் என்ற உயிரி வினைவேகம்.
10. முட்டைகள் அழுகும் போது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் துர்நாற்றம் உருவாகிறது.
11. ஆப்பிள்கள் மற்றும் சில பழங்கள் நறுக்கி வைத்த பிறகு பழுப்பு நிறத்தை அடையக்காரணம் மெலனின் நிறமிகள் காரணமாகும்.
12. இரும்பு துருபிடித்தலுக்கு காரணமானவை நீர் மற்றும் ஆக்ஜிஸன் ஆகியவை ஆகும்.
13. பித்தளைப்பாத்திரங்கள் காற்றுடன் வினைபுரிந்து பச்சை நிறப்படலத்தை உருவாக்குவதற்கு காரணம் தாமிரமும் ஈரக்காற்றுடன் வேதிவினைக்கு உட்பட்டு காரத்தன்மை வாய்ந்த தாமிரகார்பனேட்டையும், தாமிர ஹைட்ராக்ஸைடையும் உருவாக்குகிறது.
14. சாண எரிவாயுவில் காணப்படும் வாயு மீத்தேன் வாயு ஆகும்.
15. துத்தநாகம், மெக்னீசியம் போன்றவை நீர்த்த அமிலங்களுடன் வினைப்படும் போது ஹைட்ரஜன் வாயுவை வெளிவிடுகின்றன. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதால் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் உடன் வினைபுரிந்து பாப் எனும் ஒலியை உருவாக்குகிறது.
16. துரு என்பது நீரேறிய பெர்ரிக் ஆக்ஸைடு ஆகும்.
17. பசுமை இல்ல விளைவுக்கு காரணமாக அமைவது கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் குளோரோ புளோரோ கார்பன் ஆகும்.
No comments:
Post a Comment