9. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
1. அரை உலோகங்கள் என அழைக்கப்படுபவை உலோகப்போலிகள்.
2. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் உலோகம் பாதரசம்.
3. மென்மையான உலோகங்களுக்கு எ.கா சோடியம், பொட்டாசியம்.
4. கண்ணாடியில் சிராய்ப்பு ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் கடினமான உலோகம் ஆஸ்மியம்.
5. இரும்பின் திரிபு தாங்கும் பண்பு (அ) இழுவிசை பண்பு காரணமாகவே
தொடர்வண்டி பாதை அமைக்க இரும்பு பயன்படுகிறது.
6. திரவ நிலையில் காணப்படும் மற்றொரு உலோகம் புரோமின்.
7. வாயு நிலையில் காணப்படும் உலோகம் ஆக்ஜிஸன் மற்றும் நைட்ரஜன்.
8. பளபளப்பான அலோகங்களுக்கு எ.கா கிராபைட் மற்றும் அயோடின்.
9. அதிகளவு அடர்த்தியை கொண்ட அலோகம் வைரம்.
10. அதிக உருகுநிலையும் கொதிநிலையும் கொண்ட அலோகங்கள் கார்பன், போரான், சிலிக்கா.
11. கிராபைட் மின்சாரத்தை கடத்தக்கூடிய அலோகம் ஆகும்.
12. நாணயங்கள் மின்கம்பிகள் சிலைகள் தயாரிக்கப்பயன்படும் உலோகம் தாமிரம்.
13. புகைப்படத்துறை மற்றும் அலங்கார நகைகள் செய்யப்பயன்படும் உலோகம் தங்கம் மற்றும் வெள்ளி.
14. வெப்பநிலைமானி மற்றும் பாரமானிகளில் பயன்படும் உலோகம் பாதரசம்.
15. வானூர்தி மற்றும் ராக்கெட்டின் பாகங்கள் செய்யப்பயன்படுவது அலுமினியம்.
16. தானியங்கி மின்கலன் மற்றும் ஓ-கதிர் எந்திரங்கள் தயாரிக்கப்பயன்படுவது காரீயம்.
17. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று வைரம்.
18. கரிக்கோல் (அ) பென்சிலின் நடுத்தண்டில் பயன்படுத்தப்படுவது கிராபைட்.
19. துப்பாக்கித்துாள் தயாரிக்கப்பயன்படுவது கந்தகம்.
20. ரப்பரை கெட்டிப்படுத்தப் பயன்படுத்தப்படுவது கந்தகம்.
21. தீப்பெட்டி தயாரிக்கவும்இ எலிமருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவது பாஸ்பரஸ்.
22. அமோனியா தயாரிக்க பயன்படுத்தப்படுவது நைட்ரஜன்.
23. நிறம் நீக்கும் பொருளாகவும் குடிநீரில் நுண்ணுயிரிகளை அழிக்கும்
பொருளாகவும் பயன்படுவது குளோரின்.
24. ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுவது ஹைட்ரஜன்.
25. உலோகங்களை உருக்கி வெட்டவும் ஒட்டவும் பயன்படுவது ஹைட்ரஜன் சுடர் பயன்படுகிறது.
26. உலோகப்போலிகள் அனைத்தும் அறை வெப்பநிலையில் திண்மங்கள் ஆகும்.
27. குறைக்கடத்திகள் எனப்படுபவை சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம் ஆகும்.
28. மின்னனுக்கருவிகளில் பயன்படுவது சிலிக்கான்.
29. ராக்கெட்டில் எரிபொருளை பற்றவைக்க பயன்படுவது போரான்.
30. சேர்மங்களுக்கு எ.கா நீர், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சோடியம் குளோரைடு.
31. நீர் மூலக்கூறில் ஒரு ஆக்ஜிஸன் மற்றும் இரு ஹைட்ரஜன் அனுக்களின்
கனஅளவு விகிதம் 1:2 நிறை விகிதம் 8:1
32. பாறைகள் இ தாதுக்கள் போன்ற உயிரற்ற பொருட்களிலிருந்து கிடைக்கப்பெறும்
சேர்மங்கள் கனிமச்சேர்மங்கள் எனப்படும்.
33. உயிருள்ள மூலங்களான தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும்
சேர்மங்கள் கரிமச்சேர்மங்கள் எனப்படும்.
34. எரிபொட்டர்' எனப்படுவது பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு ஆகும்.
35. எரிசோடா எனப்படுவது சோடியம் ஹைட்ராக்ஸைடு ஆகும்.
36. காலமைன் எனப்படுவது துத்தநாக கார்பனேட் ஆகும்.
37. வினிகர் என்றழைக்கப்படுவது அசிட்டிக் அமிலம் ஆகும்.
38. சாதாரண உப்பின் வேதிப்பெயர் சோடியம் குளோரைடு ஆகும்.
39. சர்க்கரையின் வேதிப்பெயர் சுக்ரோஸ் ஆகும்.
40. ரொட்டிச்சோடா எனப்படுவது சோடியம் பை கார்பனேட் ஆகும்.
41. கடின நீரை மென்னீராக மாற்ற பயன்படுவது சோடியம் கார்பனேட் ஆகும்.
42. சலவைச்சோடா எனப்படுவது சோடியம் கார்பனேட் ஆகும்.
43. சலவைத்துாளின் வேதிப்பெயர் கால்சியம் ஆக்ஸி குளோரைடு ஆகும்.
44. சுட்ட சுண்ணாம்பின் வேதிப்பெயர் கால்சியம் ஆக்ஸைடு ஆகும்.
45. நீற்றிய சுண்ணாம்பின் வேதிப்பெயர் கால்சியம் ஹைட்ராக்ஸைடு ஆகும்.
46. சுண்ணாம்பு கல் எனப்படுவது கால்சியம் கார்பனேட் ஆகும்.
47. மயில் துத்தம் எனப்படுவது காப்பர் சல்பேட் ஆகும்.
48. பச்சை துத்தம் எனப்படுவது பெர்ரஸ் சல்பேட் ஆகும்.
49. சால்ட் பீட்டர் எனப்படுவது பொட்டாசியம் நைட்ரேட் ஆகும்.
50. விட்ரியால் எண்ணெய் எனப்படுவது கந்தக அமிலம் ஆகும்.
51. ஜிப்சம் எனப்படுவது கால்சியம் சல்பேட் ஆகும்.
52. பாரீஸ் சாந்து எனப்படுவது கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் ஆகும்.
53. மூரியேட் ஆப் பொட்டர்' எனப்படுவது பொட்டாசியம் குளோரைடு ஆகும்.
54. மின்விளக்கிற்கான இழைகள் தயாரிக்கப் பயன்படுவது டங்ஸ்டன் ஆகும்.
55. மின்கம்பிகள் தயாரிக்கப் பயன்படுவது தாமிரம் ஆகும்.
56. தையல் ஊசி தயாரிக்கப் பயன்படுவது இரும்பு ஆகும்.
57. தனிம வரிசை அட்டவணையில் இடம் பெறாத ஆங்கில எழுத்து J
No comments:
Post a Comment