Wednesday, August 25, 2021

SAT- 8th Science- 7.காந்தவியல்

 

7.காந்தவியல்

 1. காந்தத்தின் கவரும் பண்பு காந்தப்பண்பு. 

2. கவரும் பண்பைப் பெற்ற உலோகம் இரும்பு, கோபால்ட், நிக்கல் 

3. காந்தப்பண்பை விவரிக்கும் இயற்பியல் காந்தவியல்

4. காந்தப்பண்பை முன்பே அறிந்தவர்கள் சீனர்கள். திசைகாட்டி கருவி. 

5. காந்தம் இருவகைப்படும் - இயற்கை மற்றும் செயற்கை காந்தம். 

6. இயற்கை காந்தம் - பைரோடைட், பெர்ரைட், கூலூம்டைட். 

7. இரும்பின் தாதுக்கள் - ஹேமடைட் (89% இரும்பு) -

                                    மேக்னடைட் (72.4% இரும்பு)

                                    சிடரைட் (48.02% இரும்பு)

8. இரும்பின் ஆக்ஸைடு தாது மேக்னடைட் அதிக காந்தப்பண்பு கொண்டது. 

9. காந்தவியல் எனும் அறிவியல் பிரிவை உருவாக்கியவர், பூமி மிகப்பெரிய காந்தம் எனக் கூறியவர் - வில்லியம் கில்பர்ட்.

10. வில்லியம் கில்பர்ட் தனது காந்தவியல் பற்றிய கண்டுபிடிப்புகளை தி மேக்னடைட் எனும் நுாலில் வெளியிட்டுள்ளார்.

11. காந்தத்தின் பண்புகள் கவரும் பண்பு, விலக்கும் பண்பு ,திசைகாட்டும் பண்பு.

12. காந்தத்தின் ஒரு முனை வடமுனை மற்றொரு முனை தென்முனை

13. காந்தத்தில் ஓரின முனைகள் ஒன்றை ஒன்று விலக்கும். வேரின் முனைகள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்.

14. காந்தம் புவியின் வட தென் திசையில் வந்து நிற்கும் பண்பே காந்தத்தின் திசை காட்டும் பண்பு எனப்படும். 

15. காந்தபுலத்தின் அலகு- டெஸ்ட்லா (அ) காஸ். 

16. ஒரு டெஸ்ட்லா = 10000 காஸ். 

17. முதன்மை திசைகள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. 

18. எளிதாக காந்தமாக்க கூடிய பொருட்கள் மென் காந்தப் பொருட்கள். 

19. காந்தமாக்க வலிமையான காந்தபுலம் தேவைப்படும் பொருட்கள் வன்காந்தப்பொருட்கள்.

20. காந்தப்பொருட்கள் வகைகள் டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள்.

21. டயா காந்தப் பொருட்கள்

  • காந்தப்புலத்தின் திசைக்கு செங்குத்தாக நிற்கின்றன. 
  • வலிமை மிகுந்த பகுதியிலிருந்து வலிமை குறைந்த பகுதியை நோக்கி செல்கின்றன. 
  • காந்த புலத்திற்கு எதிரான திசையில் காந்தமாகின்றன. 
  • காந்தப்பண்பு வெப்பத்தினால் மாற்றம் அடைவது இல்லை.
  • பிஸ்மத், தாமிரம், பாதரசம், தங்கம், நீர், ஆல்கஹால் காற்று, ஹைட்ரஜன்.

 

22. பாரா காந்தப்பொருட்கள்

  • காந்தப்புலத்தின் திசைக்கு இணையாக நிற்கின்றன. 
  • வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதியை நோக்கி செல்கின்றன.
  • காந்தபுலத்தின் திசையிலேயே காந்தமாகின்றன. 
  • காந்தப்பண்பு வெப்பத்தினால் மாற்றம் அடைகின்றன. 
  • அலுமினியம், பிளாட்டினம், குரோமியம், ஆக்ஸிஜன் மாங்கனீசு போன்ற உலோகங்கள்.நிக்கல், இரும்பு,உப்பு கரைசல்கள். 

23. பெர்ரோ காந்தப்பொருட்கள்

  • காந்தப்புலத்தின் திசைக்கு இணையாக நிற்கின்றன. 
  • வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதியை நோக்கி செல்கின்றன.
  • காந்தபுலத்தின் திசையிலேயே வலிமையான காந்தமாகின்றன.
  • வெப்பப்படுத்தும் போது பாரா காந்தப்பொருளாக மாற்றமடைகிறது. 
  • இரும்பு, கோபால்ட், நிக்கல , எஃகு போன்ற உலோகங்களும் உலோக கலவைகளும் 

24. எந்த ஒரு வெப்பநிலையில் பெர்ரோ காந்தப்பொருள் பாரா காந்தப்பொருளாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை கியூரி வெப்பநிலை. 

25. தற்காலிக காந்தம் - தேனிரும்பு.

26. தற்காலிக காந்தம் - மின்சாரமணி, சுமைதூக்கிகளில் பயன்படுகிறது. 

27. பொதுவாகப் பயன்படும் நிலைகாந்தங்கள் AINiCo(அல்நிக்கோ)

அலுமினியம், நிக்கல், கோபால்ட் உலோகக்கலவை.

28. நிலைக்காந்தம் - குளிர்பதனி, ஒலிப்பெருக்கி, காந்த ஊசி. 

29. பூமியில் காணப்படும் வலிமையான திறன்மிகுந்த காந்தம் - நியோடிமியம்

30. மேக்னிட்டார் - காந்த நியூட்ரான் விண்மீன். 

31. காந்த துருவங்களை இணைக்கும் நேர்கோடு காந்த அச்சு.

32. காந்த அச்சானது புவியின் அச்சிற்கு 10 முதல் 15 வரை சாய்வாக

33. புவிகாந்தப்புலத்திற்கு காரணம் - 

பூமியின் உள்ளகப் பகுதியில் உருகிய நிலையில் உள்ள உலோகப் பொருட்களால் (3500கி.மீ ஆரம் கொண்ட உட்கருவில் காணப்படுகிறது).

34. புறாக்கள் நீண்ட தூரம் பயணித்து மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கே திரும்பும் திறன் பெற்றதற்கு காரணம் - அவற்றின் அலகுகளில் மேக்னடைட் எனும் காந்தப்பொருளால் புவியின் காந்தப்புலத்தை அறியும் ஆற்றல்.

35. குளிர்பதனிகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தை விட புவிக்காந்தமானது மடங்கு அதிக திறன் கொண்டதாகும்.

36. மெக்லிவ் தொடர்வண்டி - சக்கரம் கிடையாது மின்காந்தம் பயன்படுத்தப்படுகிறது 500கிமீ/மணி வேகத்தில் செல்லக்கூடியது. 

37. மாக்ஸ்ட்ரைப் - ATM card, credit card களில் பின்புறத்தில் காணப்படும்

காந்த வரிப்பட்டை. இரும்பிலிருந்து பெறப்பட்ட காந்ததுகள்களால் ஆனது.

38. வங்கிகளில் MICR எண்களை அறிந்து கொள்வதற்கு கணினிகளில் பொருத்தப்பட்டுள்ள காந்தங்கள் பயன்படுகின்றன.

39. காந்தப் பொருட்களோடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுப் பொருட்களை பிரித்தெடுப்பதற்கு காந்தக்கடத்துப் பட்டைகள் (conveyor belts) பயன்படுகின்றன.

40. திருகு ஆணியின் முனையில் சிறிய அளவிலான காந்தம் பொறுத்தப்பட்டு இருக்கும்.

41. மருத்துவமனைகளில் MRI ஸ்கேன்களில் வலிமையான மின்காந்தம் பயன்படுகின்றன.

42. டைனமோக்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய காந்தம் பயன்படுகிறது. 

43. கணினியில் நிலைவட்டுகளில் (Harddisks) காந்தம் பயன்படுகிறது.

44. காந்தத்தன்மையுள்ள பாறை மேக்னடைட்.

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms