Wednesday, August 25, 2021

SAT- 8th Science -6.ஒலியியல்

 

6.ஒலியியல்

 

1. ஒரு பொருள் அதிர்விற்கு உட்படும்போது ஒலி உருவாகிறது. 

2. ஒரு பொருளின் முன் பின் இயக்கம் அதிர்வு எனப்படும். 

3. ஒளியானது வெற்றிடத்தில் பரவாது.

4. ஒளியின் வேகமானது திரவங்களை விட திடப் பொருட்களில் அதிகம் .வாயுக்களில் மிகக் குறைவு.

5. ஒலிப்பதிவு சாதனம் - தாமஸ் ஆல்வா எடிசன் 1877

6. ஒலியின் வேகம் v=nλ

7. அலைநீளத்தின் அலகு மீட்டர்

8. அதிர்வெண் - ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை. 

9. அதிர்வெண் அலகு ஹெர்ட்ஸ்.

10. ஓளியின் வேகமானது வெப்பநிலை, அழுத்தம் மற்றும் ஈரப்பதம் சார்ந்தது.

11. காற்றில் உள்ள நீராவியின் அளவு ஈரப்பதம் எனப்படும். 

12. வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒலியின் வேகம் அதிகரிக்கும்

13. ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் வேகம் அதிகரிக்கும்

14. ஒலியானது அலை வடிவத்தில் பரவுகிறது.

15. அலை இயக்கத்தில் ஆற்றல் மட்டுமே கடத்தப்படுகிறது. துகள்கள் இடம்பெயர்வது இல்லை.

16. இயந்திர அலையின் இருவகை குறுக்கலை, நெட்டலை. 

17. குறுக்கலை - திட மற்றும் திரவங்களில் உருவாகிறது.

18. நெட்டலை - திரவ மற்றும் வாயுக்களில் உருவாகிறது. 

19. விண்வெளி வீரர் ஒருவொருக்கொருவர் தங்கள் தலைக்கவசங்களில் உள்ள சில சாதனங்களின் உதவியுடன் ஒலி அலைகளை நெட்டலைகளாக மாற்றி தொடர்பு கொள்கின்றனர்.

20. பூகம்பம் எரிமலை வெடிப்புகள் நெட்டலைகள்.

21. மெல்லிய ஒலியை உரத்த ஒலியிலிருந்து வேறுபடுத்துவதற்கு உதவும் ஒலியின் சிறப்பியல்பே உரப்பு எனப்படும்.

22. ஓலியின் அலகு டெசிபல்.

23. கேட்கக்கூடிய (அ) சோனிக் ஒலியின் அளவு 20 முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை.

24. குற்றொலி (அ) இன்ஃப்ராசானிக் ஒலியின் அளவு 20 ஹெர்ட்ஸ் குறைவான. 

25. நாய், டால்பின் குற்றொலியை உணரக் கூடியவை. 

26. மீயொலி 20000 ஹெர்ட்ஸ் விட அதிகம். 

27. வெளவால், நாய், டால்பின் - மீயொலியை உணரக்கூடியவை. 

28. மருத்துவதுறையில் மீயொலி சோனோகிராம்

29. கடலின் ஆழத்தைக் கண்டறிவதில் மீயொலி - சோனார்

30. கால்டன் விசில் - இந்த ஒலி மனித செவிக்கு புலப்படாது ஆனால் நாய்களால் கேட்க முடியும்.நாய்களுக்கு புலனாய்வு பயிற்சி அளிக்க பயன்படுகிறது. 

31. செவிக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தரும் ஒலி - இசை

32. காற்றுக்கருவிகள் - எக்காளம், புல்லாங்குழல், ஷெஹ்னாய். ஒலி

33. காற்றுக்கருவிகள் வெற்றிடக் குழாயில் ஏற்படும் காற்றின் அதிர்வுகளால் ஏற்படுகிறது.

34. நாணல் கருவிகள் ஹார்மோனியம், வாயிசைக்கருவிகள் (harmonium) 

35. நாணல் கருவிகள் ஊதப்படும் காற்றின் காரணமாக கருவியில் உள்ள நாணல் அதிர்வுக்கு உட்படுகிறது.

36. கம்பிக்கருவிகள் - வயலின், கித்தார், சித்தார்.

37. மனிதரில் குரலானது தொண்டையிலுள்ள லாரிங்ஸ் எனப்படும் குரல் ஒலிப்பெட்டியில் உருவாகிறது.

38. மனிதனின் செவிப்பறையில் காணப்படும் சவ்வு டிம்போனிக் சவ்வு. 

39. செவிக்கு மகிழ்ச்சி தராத ஒலி - இரைச்சல்

40. அலை வீச்சு - ஒலி அலையின் பெரும இடப்பெயர்ச்சி. 

41. எதிரொலி ஒலியின் பிரதிபலிப்பு.

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms