Thursday, July 22, 2021

10th Social - History 2 -இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

 I சரியான விடையைத் தேர்வு செய்யவும் 
 
1.  இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது? 
அ) ஜெர்மனி ஆ) ரஷ்யா இ) போப் ஈ) ஸ்பெயின் 
 
2.  யாருடைய ஆக்கிரமிப்போ மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று? 
அ) ஹெர்மன் கோர்ட்ஸ் ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர் ஈ) முதலாம் பெட்ரோ 
 
3.  பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்? அ) ஆங்கிலேயர் ஆ) ஸ்பானியர் இ) ரஷ்யர் ஈ) பிரெஞ்சுக்காரர் 
 
4.  லத்தீன் அமெரிக்காவுடன் 'அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்? 
அ) ரூஸ்வெல்ட் ஆ) ட்ரூமன் இ) உட்ரோவில்சன் ஈ) ஐசனோவர்
 
 5.  உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை? அ) ஐரோப்பா ஆ) லத்தீன் அமெரிக்கா இ) இந்தியா ஈ) சீனா
 
II கோடிட்ட இடங்களை நிரப்புக 
1.  சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் ......விடை:பெர்டிணண்ட் லாஸ்ஸல்லி
2.  நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் .......  விடை:ஜோசப் கோயபெல்ஸ்
3.  வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ...... இல் நிறுவப்பட்டது.விடை:
4.  நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை......  என அழைக்கப்பட்டது. விடை: கெஸ்டபோ
5.  தென்னாப்பிரிக்க ஒன்றியம் ...... ஆம் ஆண்டு மே மாதம் உருவானது. விடை:கி.பி. 1910
6.  ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ......  விடை:27
ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 
7.  போயர்கள் ......  என்றும் அழைக்கப்பட்டனர். விடை: ஆப்பிரிக்க நேர்கள்
 
 III சரியான கூற்றைத் தேர்வு செய்க 
1.   i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக்கடமையாக இருந்தது. 
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது. 
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் எற்பட்டது. i
v) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அ) i), ii) ஆகியவை சரி             ஆ) iii) சரி 
இ) iii), iv) ஆகியவை சரி          ஈ) i), ii), iii) ஆகியவை சரி 
 
2.  கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது. 
காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது. 
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி          
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு 
ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.
 
 3. கூற்று: 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது. 
காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும். 
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி 
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல. 
இ) கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு 
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை.
 
 IV பொருத்துக 
 
 1. டிரான்ஸ்வால் - ஜெர்மனி 
2. டோங்கிங் - ஹிட்லர் 
3. ஹின்டன்பர்க் - இத்தாலி 
4. மூன்றாம் ரெய்க் - தங்கம் 
5. மாட்டியோட்டி - கொரில்லா நடவடிக்கைகள்
 
விடை 1.ஈ 2.உ 3.அ 4.ஆ 5.இ
 

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District