Sunday, July 12, 2020

தமிழக அரசின் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் (TN Govt Welfare Schemes)

அரசின் நல உதவித் திட்டங்கள் என்பது சலுகை அல்ல அது சாமானிய மக்களுக்கான உரிமை.

இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், பேருந்து பயண அட்டை, மதிய உணவு, பாட நூல்கள், காலணி , எழுது பொருட்கள் , புத்தகப்பை மற்றும் பிற திட்டங்களைத் தவிர இன்ன பிற திட்டங்களைக் காணலாம். இந்தத் திட்டங்கள் ஏற்கனவே மக்களிடையே போதிய விழிப்புணர்வினைக் கொண்டிருக்கும் காரணத்தினால் அவைகள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.

முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வியினைத் தொடருவதற்கான கல்வி உதவித் தொகை

(இந்தத் திட்டம் பற்றி விரிவாகக் காண  இங்கே செல்லவும்.

இரானுவ வீரர்கள் / முன்னாள் இரானுவ வீரர்கள் , இலங்கை மற்றும் மற்ற நாட்டில் இருந்து வந்த அகதிகளின் குழந்தைகளுக்கான உதவித் தொகை:

இந்திய அரசின் இரானுவ பிரிவில் தற்போது பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் இரானுவ வீரர்களின் குழந்தைகளுக்கும் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வந்த அகதிகளின் குழந்தைகளுக்கும் இந்திய அரசாங்கத்தின் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகையினை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------------------------

Scavenger, Sweeper ஆகியோரின் குழந்தைகளுக்கான உதவித் தொகை

மாவட்ட ஆட்சியருக்கு தலைமை ஆசிரியரின் மூலமாக இந்த விண்ணப்பம் கொடுக்கப்பட வேண்டும். 1-5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 950 ரூபாயும் 6-8 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 1150 ரூபாயும் 9-10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 1300 ரூபாயும் வழங்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------

ஆதி திராவிடர் (SC), பிற்படுத்தப்பட்டோர் (BC) , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை

SC, BC, MBC இன மாணவர்களுக்கான உதவித் தொகை இது. இந்த உதவித் தொகையானது மாணவர்களின் பள்ளிக் கல்விக் கட்டணம் , தேர்வுக் கட்டணம் இதர கட்டணங்களுக்கான தொகை ஆகியன உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------

IEDC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை.

உடல் இயக்கக் குறைபாடு உள்ள மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் பழகுவதில் உள்ள சிக்கல்களைப் போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் படி சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது , அந்த மாணவர்களுக்கு நூல்கள் வழங்குதல் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்குதல் போன்ற செயல்கள் செய்யப்படுகின்றன.

------------------------------------------------------------------------------------------------------------------------

தேசிய ஆசிரியர் நல உதவி வாரியம் மூலமாக ஆசிரியர்களின் குழந்தைக்கு வழங்கப்படும் உதவித் தொகை.

தேசிய ஆசிரியர் நல உதவி திட்டத்தின் மூலமாக தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு 5000 ரூபாயும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு 2500 ரூபாயும் வழங்கப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------

தேசிய ஆசிரியர் நல உதவி வாரியம் மூலமாக ஆசிரியர்கள் அல்லது ஆசிரியரைச் சார்ந்துள்ளோர்களின் மருத்துவ உதவித் தொகை.

தேசிய ஆசிரியர் நல உதவி திட்டத்தின் மூலமாக ஆசிரியர்களுக்கும் ஆசிரியரைச் சார்ந்து இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவச் செலவில் 75% அல்லது 50,000 இதில் எது குறைவோ அது கிடைக்கும். முக்கியமாக NHIS திட்டத்தில் சேராத ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.

------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழக வேளான் நலத் துறை உதவித் திட்டம் -2006 உதவித் தொகை.

தமிழக வேளான்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அவர்களது பணிக்காலத்தில் ஏற்படும் விபத்தில் இறந்தாலோ அல்லது இயங்க முடியாமல் போனாலோ அவர்களது குழந்தைகளின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாய் Deposit செய்யப்படும். விபத்தில் பெற்றோர்கள் எஞ்சியிருந்தால் அவர்களுடன் இனைத்தோ அல்லது இரண்டு பெற்றோர்களும் இறந்தால் பாதுகாவலர் Guardian ஆகிய யாரேனும் ஒருவருடன் இணைத்து இணைப்புக் கணக்காக (Joint account) துவக்கி வரவு வைக்கப்படும்.

------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழக வேளான் நலத் துறை உதவித் திட்டம் -2006 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றால் உதவித் தொகை.

 குழந்தைகள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மாணவர்களுக்குன் 1,250 ரூபாயும் மாணவிகளுக்கு 1,500 ரூபாயும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1,750 ரூபாயும் மாணவிகளுக்கு 2,000 ரூபாயும் வழங்கப்படும். இதற்கு வருவாய் துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை தேவை. இது அனைத்து சாதியினருக்கும் பொருந்தும்

------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (SC, BC, MBC).

தலைமை ஆசிரியர் மூலமாக விணப்பிக்கும் இந்தத் திட்டம் SC, BC,MBC பெண் குழந்தைகளின் கல்வியினை ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. 3-5 வகுப்பு படிக்கும் பெண்களுக்கு 500 ரூபாயும் 6-8 படிக்கும் மாணவிகளுக்கு 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms