Thursday, July 30, 2020

ஆன்லைன் வகுப்பு மேற்கொள்வதற்கான படிநிலைகள்

ஆசிரியர்களை மாணவர்களை அணுகுவதன் மூலம், தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஆரோக்கியமான நடைமுறைகள், சரியான ஊட்டச்சத்து எடுக்கச் செய்தல் குறித்து குழந்தைகளுகளை விழிப்புடன் வைத்திருக்க உதவும். மாணவர்களுடன் ஆரோக்கியமான மன தொடர்பை ஏற்படுத்திய பின்னர் கற்பித்தல் தொடங்கப்படலாம்.

ஆன்லைன் வகுப்பு மேற்கொள்வதற்கான படிநிலைகள்

படி-1

வகுப்பறை கற்றலைப் போலவே ஆன்லைன் வகுப்புகள் நடைபெற முறையான திட்டமிடல் அவசியம்.இதனை வெற்றிகரமான திட்டமாக்க பள்ளிக் கல்வித் துறை, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒத்திசைவான திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும். இது நபருக்கு நபர் வேறுபடலாம் எனினும் பின்பற்றப்பட வேண்டிய முக்கியக் காரணிகள் பின்வருமாறு :

  • ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை

  • காலம் மற்றும் நேர அட்டவணை

  • ஆசிரியர்களுக்கான டிஜிட்டல் சாதனங்களின் கிடைக்கும் வாய்ப்பு

  • ஆசிரியருக்கான தரமான வளங்களின் கிடைப்பதற்கான வாய்ப்பு மற்றும் அதனை ஆசிரியர்கள் பயன்படுத்தும் திறன்

  • ஆன்லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் திறன்.

கற்பவர்

கற்பவர்

  • வயது, வர்க்கம், உடல் குறைபாடுகள் போன்ற உடலியல் காரணிகள்

  • ஆர்வம், கற்றல் விதம் , மாணவர்களின் ஆர்வம், சிறப்பு கவனம் தேவைப்படும் அறிவுசார் குறைபாடுகள் போன்ற உளவியல் காரணிகள்.

  • மாணவரின் மொழி, டிஜிட்டல் கேஜெட்டுகள் மற்றும் வசதிகளின் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் பயன்படுத்தும் விதம், பெற்றோரின் ஆதரவு போன்ற சமூகவியல் காரணிகள்.

படி-2

இரண்டாவது படி முடிவெடுத்த பிறகு மறுஆய்வு செய்வது

வெவ்வேறு கற்றல் நிலைகள் கொண்ட மாணவர்களுக்கான வெவ்வேறு கற்பித்தல் முறைகள் அல்லது கருவிகள் மற்றும் ஆசிரியர் / பள்ளிக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் அடையாளம் கண்ட பிறகு. இது நேரம் / காலம், வளங்களின் தரம், பணிகளின் நோக்கம், மதிப்பீட்டு முறைகள், அத்துடன் இணைய பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய பாதுகாப்புக் குறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டத்தினை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

படி- 3 (ஏற்பாடு செய்தல்)

சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்கள் மற்றும் ஆதாரங்களை மறுஆய்வு செய்த பின்னர், அவர்களின் தினசரி / வாராந்திர அல்லது மாதாந்திர செயல்பாட்டிற்கான சரியான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.தொடர் பணி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதனையும் முடிவு செய்தல்.

படி- 4 வழிகாட்டுதல்

மாணார்கள் மற்றும் பெற்றோர்கள் வழிகாட்டல் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது. ஆசிரியர்கள் மாணவர்களிடமோ அல்லது அவர்களின் பெற்றோர்களிடமோ மாணவர்கள் படிக்க வேண்டியனவற்றை எஸ்.எம். எஸ் ஆல்லது பிற வழிகள் மூலம் தெரிவித்தல் வேண்டும்.

படி-5: பேசுதல்

மாணவர்கள் குழுக்களிடையே நடைபெறும் கற்றல் நடைமுறைகளை அவர்களது பெற்றோர்களுக்கும் மாணவவர்களுக்கும் தெரிவிப்பதன் மூலம் அவர்களது கற்றலை ஊக்கப்படுத்த இயலும்.

படி-6 ஒதுக்கீடு செய்தல்

இரண்டு அல்லது மூன்று கருப்பொருள்களை இறுதி செய்த பிறகு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சில சுவாரஸ்யமான பணிகளை (செயல்திட்டம்) வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பணிகள் குழுவாகவோ அல்லது தனி நபர்களுக்கானதாகவோ இருக்கலாம்.அது மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் (கணினி, செல்போன்) ஆகியவற்றைப் பொருத்தது.

படி-7 கண்கானித்தல்

கொடுக்கப்பட்ட பணிகளை மாணவர்கள் செய்கிறார்களா என்பதனை கண்காணித்தல் மிகவும் அவசியம். இல்லையெனில், மாணவர்கள் தங்கள் ஆசிரியர் அல்லது பெற்றோரிடமிருந்து தங்கள் பணி அல்லது வேலையைப் பற்றி பதில் பெறாவிட்டால், அவர்கள் ஆர்வத்தை இழக்க நேரிடும். ஆசிரியர்கள் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் அல்லது அவர்களை அழைத்து அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் காட்டும்படி கேட்டுக்கொள்வதன் மூலமோ அல்லது இது முடியாவிட்டால், இந்த பணிகளை ஒரு கோப்பில் வைத்து பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்வதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் பணிகளைக் கண்காணிக்க வேண்டும்.

படி-8 பாராட்டுதல்

மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்த பின்னர் ஆசிரியர்கள் அவர்களை போனில் அழைத்தோ அல்லது வாட்சப் முதலியவற்றில் பாராட்டினைத் தெரிவிக்கலாம். இதன்மூலம் மாணவர்களின் ஊக்கத்தினை அதிகரிக்கலாம்.

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms