For G O: Click Here
கோவிட்-19 தொற்று காரணமாக நமது அன்றாட வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. இதற்கு பள்ளிக் கல்வியும் விதிவிலக்கல்ல. எனவே பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்கும் விதமாக அவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியோ அல்லது இணைய வழியிலோ வகுப்புகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக வேண்டியுள்ளது.
டிஜிட்டல் அல்லது ஆன்லைன் கல்வியின் முக்கிய நன்மை என்னவென்றால், இந்த COVID 19 தொற்றுநோய் போன்ற அசாதாரண சூழ்நிலையில் எந்தவித இடையூறும் இல்லாமல் தரமான கல்வி பள்ளிகளில் வழங்கப்படுவது போல உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க வாய்ப்பு உள்ளது.
பயிற்றுவிக்கும் முறைகள்:
ஆன்லைன்
கணினி/ஸ்மார்ட் போன்/ஸ்மார்ட் டிவி
2. பகுதி ஆன்லைன்
கணினி/ஸ்மார்ட் போன் இருந்து இன்டெர்நெட் வசதி இல்லாத் போது
3. ஆஃப்லைன் மோட் (இணைய வசதி இல்லாத போது)
3.1 கல்வித் தொலைக் காட்சி
3.2 ரேடியோ
3.3. மிகக் குறைவான இணைய வேகம் கிடைக்கும் இடங்கள்.
3.4 hitec-lab தவிர்த்த இடங்களில் இணைய இணைப்பு கிடைக்காத போது
ஜூலை 14-2020 முதல் கல்வித் தொலைக்காட்சியில் கற்றல் வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
14.07.2020 அன்று முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் லேப்டாப்பில் கற்றல் தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றம் செய்து தரப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3 முதல் தனியார் தொலைக்காட்சிகளிலும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோக்கள் மீண்டும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்களில் உள்ள QR code மூலம் கற்றல்
https://e-learn.tnschools.gov.in/, https://diksha.gov.in/tn or https://diksha.gov.in/explore, https://www.kalvitholaikaatchi.com/ ஆகிய வலைத்தளங்களின் மூலமாகக் கற்கலாம்.
ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவக்கூடிய வலைத்தளமான http://swayam.gov.in இதில் 1900 படிப்புகள் தொடர்பான கற்றல் வளங்கள் உள்ளன.
NROER வலைத்தளத்தில் மொத்தம் 14527 கோப்புகள் உள்ளன, இதில் 401 தொகுப்புகள், 2779 ஆவணங்கள், 1345 ஊடாடும் தன்மை கொண்டவை, 1664 ஆடியோக்கள், 2586 படங்கள் மற்றும் 6153 வீடியோக்கள் வெவ்வேறு பிராந்திய மொழிகளில் உள்ளன. : http://nroer.gov.in/welcome
தமிழக அரசின் கற்றல் தளங்கள்
டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட கற்றல் உள்ளடக்கங்களான பாடப்புத்தகங்கள், வீடியோ பதிவுகள், தொலைக்காட்சி பாடங்கள், ஆன்லைன் மதிப்பீடுகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது.
இந்த வலைத்தளம் 10,000 க்கும் மேற்பட்ட மின்-கற்றல் உள்ளடக்கங்கள், 390 டிஜிட்டல் பாடப்புத்தகங்கள் மற்றும் 2000+ ஒருங்கிணைந்த YouTube வீடியோக்களை ஒரே இடத்தில் வழங்குகிறது.https://e-learn.tnschools.gov.in/
13,000 மின்னனு கற்றல் வளங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. 1000 வீடியோக்களும் , எளிய அறிவியல் சோதனைகளும் உள்ளது.https://diksha.gov.in/tn or https://diksha.gov.in/explore
ஆசிரியர்களுக்கு https://tntp.tnschools.gov.in/
youtube (கல்வித் தொலைக்காட்சி, TNSCERT
https://tnschools.workplace.com/ (facebook)
No comments:
Post a Comment