Wednesday, July 8, 2020

Alternative for ZOOM app (ZOOM செயலிக்கு மாற்றாக உள்ள செயலிகள்)

ZOOM செயலியில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பிற்குப்பிறகு அதற்கான மாற்று செயலிக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. அதற்கான மாற்று செயலிகளில் சிலவற்றை பின்வருமாறு காணலாம்.


1. Whatsapp Messenger

இந்த செயலியினை ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் , வலைத்தளங்களில் கட்டணம் இன்றி பயன்படுத்தலாம். இது பேஸ்புக் நிறுவனத்தின் செயலி ஆகும். 250 நபர்கள் ஒரு குழுவாக message அனுப்ப இயலும் . ஆனால் ஒரு சமயத்தில் அதிகபட்சமாக நான்கு பேர் மட்டுமே video call பேச முடியும்.

2. Facebook Messenger

இந்த செயலியினை ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் , வலைத்தளங்களில் கட்டணம் இன்றி பயன்படுத்தலாம். இது பேஸ்புக் நிறுவனத்தின் செயலி ஆகும். 50பேர் வரை video call பேச முடியும். ஒரே சமயத்தில் 6 பேர் திரையில் தோன்றலாம்.

3. FaceTime

ஐஓஎஸ் , மேக் போன்ற இயங்குதளங்களில் இதனைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. இது ஓர் ஆப்பிள் நிறுவனத்தின் செயலி . ஒரே சமயத்தில் 32 பேர் பேசலாம். அதன் ஐஓஎஸ் பதிப்பிற்கேற்ப பல வசதிகள் உள்ளன.

4. Google Duo

இந்த செயலியினை ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் , நெஸ்ட் இயங்குதளங்களில் கட்டணம் இன்றி பயன்படுத்தலாம். 12 பேர் ஒரே சமயத்தில் பேசலாம்.

5. Discord

இந்தச் செயலியினை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், லினக்ஸ், மேக் இயங்குதளங்களில் இதனைக் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

6. Microsoft Teams

விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இதனைப் பயன்படுத்தலாம். இலவசமாகவும் , கட்டனம் செலுத்தியும் இந்தச் செயலியினை நாம் பயன்படுத்தலாம். ஒரு நிறுவன குழுவினர் பயன்படுத்துவதனை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது எனினும் சில குறைவான நபர்கள் வீடியோ கால் பேசும் வசதியினைக் கொண்டுள்ளது.

7. JITSI

அனைத்து இயங்குதளங்களிலும் கிடைக்கக் கூடிய ஒரே கட்டற்ற (OPEN SOURCE) மென்பொருள் ஆகும். கடவுச் சொல் கொண்டு இதனை பாதுகாக்க இயலும்.

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms