Monday, September 12, 2022

பா-வகை, அலகிடுதல்

பா-வகை, அலகிடுதல்

அகராதியில் காண்க.

ஆசுகவி
மதுரகவி
சித்திரகவி
வித்தாரகவி
Answer:
ஆசுகவி – கொடுத்தப் பொருளை உடனே பாடும் பாட்டு.
அப்பாடலைப் பாடும் புலவன்.
மதுரகவி – இனிமை பெருகப் பாடும் கவி.
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு.
சித்திரகவி – சித்திரத்தில் அமைத்ததற்கு ஏற்ப பாடும் இறைக்கவி, 21 நயங்களில் கவிதை இயற்றுபவர்
வித்தாரகவி – விரித்துப் பாடப் பெறும் பாட்டு.
விரிவாகப் பாடும் நூல்.

கலைச்சொல் அறிவோம்

Belief – நம்பிக்கை
Philosopher – மெய்யியலாளர்
Renaissance – மறுமலர்ச்சி
Revivalism – மீட்டுருவாக்கம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……………………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Answer:
அ) அகவற்பா

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யாப்பின் உறுப்புகள்…………………….
அ) 3
இ) 6
ஆ) 5
ஈ) 7
Answer:
இ) 6

Question 2.
பொருத்திக் காட்டுக.

அ) 2, 4, 1, 3
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 1, 2, 4
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 2, 4, 1, 3


Question 3.
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Question 4.
வெண்பாக்களின் வகைகள் எத்தனை?
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
இ) ஐந்து

Question 5.
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …………..
அ) அகவல்
ஆ) துள்ளல்
இ) தூங்கல்
ஈ) செப்பல்
Answer:
ஆ) துள்ளல்

Question 6.
வெண்பாவில் அமைந்த நூல்கள் …………..
அ) குறள்; நாலடியார்
ஆ) நாலடியார்; மணிமேகலை
இ) குறள்; சிலம்பு
ஈ) குறள், வளையாபதி
Answer:
அ) குறள்; நாலடியார்

Question 7.
ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா …………..
அ) ஆசிரியப்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) வெண்பா

Question 8.
“பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை …………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
அ) அகவற்பா

Question 9.
பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும் பா வகை …………..
அ) கலிவெண்பா
ஆ) வஞ்சிப்பா
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) இன்னிசை வெண்பா
Answer:
ஆ) வஞ்சிப்பா

Question 10.
சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது – …………..
அ) தூங்கலோசை
ஆ) துள்ளலோசை
இ) செப்பலோசை
ஈ) அகவலோசை
Answer:
அ) தூங்கலோசை

Question 11.
இருவர் உரையாடுவது போன்ற ஓசை – …………..
அ) செப்பலோசை
ஆ) அகவலோசை
இ) துள்ளலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
அ) செப்பலோசை

Question 12.
ஆசிரியப்பாவின் வகைகள் …………..
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

Question 13.
“ஏகாரத்தில்” முடியும் சிறப்புடைய பா வகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Question 14.
பொருத்துக.
1. இருவர் உரையாடுவது போன்றது – அ) அகவலோசை
2. சொற்பொழிவாற்றுவது போன்றது – ஆ) செப்பலோசை
3. தாழ்ந்து உயர்ந்து வருவது – இ) தூங்கலோசை
4. தாழ்ந்தே வருவது – ஈ) துள்ளளோசை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 15.
அகவற்பாவுடன் தொடர்பில்லாத ஒன்று …………..
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பெருங்கதை
ஈ) நாலடியார்
Answer:
ஈ) நாலடியார்

Question 16.
பொருத்துக.
1. நேர் – அ) மலர்
2. நிரை – ஆ) காசு
3. நேர்பு – இ) பிறப்பு
4. நிரைபு – ஈ) நாள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 17.
பொருத்துக.
1. நேர் நேர் – அ) புளிமா
2. நிரை நேர் – ஆ) தேமா
3. நேர் நிரை – இ) கருவிளம்
4. நிரை நிரை – ஈ) கூவிளம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 18.
பொருத்துக.
1. நேர் நேர் நேர் – அ) புளிமாங்காய்
2. நிரை நேர் நேர் – ஆ) தேமாங்காய்
3. நேர் நிரை நேர் – இ) கருவிளங்காய்
4. நிரை நிரை நேர் – ஈ) கூவிளங்காய்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

Question 19.
பொருத்துக.
1. நேர் நேர் நிரை – அ) புளிமாங்கனி
2. நிரை நேர் நிரை – ஆ) தேமாங்கனி
3. நேர் நிரை நிரை – இ) கருவிளங்கனி
4. நிரை நிரை நிரை – ஈ) கூவிளங்கனி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 20.
புலவர் குழந்தை இயற்றிய யாப்பு நூல் …………………
அ) யாப்பதிகாரம்
ஆ) யாப்பருங்கலம்
இ) யாப்பருங்கலங்காரிகை
ஈ) நன்னூல்
Answer:
அ) யாப்பதிகாரம்

 

 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms