3.ஒளியியல்
1.ஒளியானது நேர்கோட்டில் செல்லும்.
2.சாலைகளில் பின்புறம் வரக்கூடிய வாகனங்களை காண்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடி குவி ஆடி.
3.குவி ஆடிகளில் எழுதப்பட்டு இருக்கும் எச்சரிக்கை வாசகம்
இக்கண்ணாடியில் தோன்றும் பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது என்பதாகும்.
4.கிரிக்கோ ரோமன் காலத்திலிருந்து பரவளைய ஆடி வேலை செய்யும் தத்துவம் அறியப்பட்டு இருந்தது.
5.எரிக்கும் ஆடிகள் எனும் நூலை எழுதியவர் டையோகிள்ஸ்.
6.பரவளைய ஆடியை எதிரொளிக்கும் வானலை வாங்கி வடிவில் வடிவமைத்தவர் ஹென்றி ஹெர்ட்ஸ்.
7.ஆடி உருவாக்கப்பட்ட கோளத்தின் மையம் வளைவு மையம் எனப்படும்.
8.ஆடிமையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் நேர்கோடு முதன்மை அச்சு எனப்படும்.
9.ஆடிமையத்திற்கும், முதன்மை குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவியதொலைவு எனப்படும்.
10.குவியதொலைவு = வளைவு ஆரம்/2
11.திரையில் பிடிக்க இயலும் பிம்பம் மெய்பிம்பம் ஆகும்.
12.திரையில் பிடிக்க இயலாத பிம்பம் மாயபிம்பம்.
13.குவியாடியில் தோன்றும் பிம்பம் நேரான மாய பிம்பம்.
14.குழியாடியில் தோன்றும் பிம்பம் தலைகீழான மெய்பிம்பம்.
15.அலங்காரக் கண்ணாடி, முகச்சவரக்கண்ணாடிகளில் பயன்படுவது குழி ஆடி.
16. விளக்குகள்;, தேடு விளக்குகள்இ வாகனங்களின் முகப்பு விளக்குகளில் பயன்படும் ஆடி குழிஆடி.
17.சூரிய சமையல் கலனில் பயன்படுவது குழிஆடி.
18.வாகனங்களில் பின்புறம் வரும் வாகனங்களைக் காண, பொது இடங்கள் , வளைவுகள் ஆகியவற்றில் பயன்படும் ஆடி குவி ஆடி.
19.மருத்துவம் மற்றும் தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படும் ஆடி குழி ஆடி.
20.படுகதிர் எதிரொளிப்பு கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு அகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமையும்.
21.படுகோணமும் எதிரொளிப்பு கோணமும் எப்போதும் சமமாகவே இருக்கும்.
22.பிம்பங்களின் எண்ணிக்கை = 360°/θ -1
23.பெரிஸ்கோப்பின் உட்பகுதியில் கண்ணாடி (அ) முப்பட்டகமானது 45° கோணசாய்வில் அமைக்கப்பட்டுள்ளது.
24.போரிலும் ராணுவப்பதுங்கு குழியிலும் நீர்மூழ்கி கப்பல்களிலும் பயன்படுவது பெரிஸ்கோப்
25.ஓளியின் திசைவேகம் = 3x108m / s
26.ஓளியானது அடர்குறை ஊடகத்திலிருந் அடர்மிகு ஊடகத்திற்கு செல்லும்போது அதன் செங்குத்துக்கோட்டை நோக்கி விலகல் அடையும்.
27.ஓளியானது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு செங்குத்துக்கோட்டை விட்டு விலகிச் செல்லும்.
28.ஓளியின் திசைவேகம் அதிகமாக இருக்கும் போது விலகல் குறைவாக இருக்கும்.
29.ஓளியின் திசைவேகம் குறைவாக இருக்கும் போது விலகல் அதிகமாக இருக்கும்.
30.பொருள் மற்றும் ஒளிவிலகல் எண்
பொருள் |
ஓளிவிலகல் எண் |
காற்று |
1.0 |
நீர் |
1.33 |
ஈதர் |
1.36 |
மண்ணெண்ணை |
1.41 |
சாதாரண கண்ணாடி |
1.5 |
குவார்ட்ஸ் |
1.56 |
வைரம் |
2.41 |
31. ஸ்நெல் விதி = Sin i/Sin r
32. வெள்ளை நிற ஒளியானது ஏழு நிறங்களாக பிரிகை அடைவது நிறப்பிரிகை எனப்படும்.
33. சிவப்புநிற கதிர் அதிக அலைநீளம் குறைந்த விலகல் உடையது.
34. ஊதாநிறக்கதிர் குறைந்த அலைநீளம் அதிக விலகல் உடையது.
35. வானவில் எப்போதும் சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்திசையில் தோன்றும். -
36. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள் கோளக ஆடிகள் எனப்படும்.
37. உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள் குவி ஆடிகள் ஆகும்.
38. பொருளானது C - ல் வைக்கப்படும்போது பொருளின் அளவும் பிம்பத்தின் அளவும் சமமாக இருக்கும்.
39. கலைடாஸ்கோப்பானது ஒளியின் பன்முக எதிரொளிப்பு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
40. பரவளைய ஆடிகளை பரவளைய எதிரொளிப்பான்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
41. ஓளிவிலகல் எண் =μ= காற்றில் ஒளியின் திசைவேகம் / ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்.
42. ஒளியை எதிரொளிக்கும் பண்பினை பெற்ற பளபளப்பான சாதனம் ஆடி எனப்படும்.
ஆடிகள் சமதள ஆடி மற்றும் வளைந்த பரப்புடைய ஆடி என இருவகைப்படும்.
43. சமதள ஆடிகள் சரியான பிம்பத்தினை உருவாக்குகின்றன.
44. வளைந்த பரப்புடைய ஆடிகள்
கோளக ஆடிகள், உருளை ஆடிகள், பரவளைய ஆடிகள், நீள்வட்ட ஆடிகள் ஆகியவை.
45. கோளக ஆடிகள் குவி ஆடி மற்றும் குழி ஆடி ஆகியவை.
46. வளைந்த பரப்புடைய ஆடிகள் சிறிய மற்றும் பெரிய பிம்பத்தினை
உருவாக்குகின்றன.
47. 16 ஆம் நூற்றாண்டில் இத்தாலியிலுள்ள வெனிஸ் நகர மக்கள் கண்ணாடி
தகட்டில் வெள்ளி உலோகக் கலவையை படலமாக பூசி ஆடியாக
பயன்படுத்தினர்.
48. பரவளைய ஆடிகள் (அ) பரவளைய எதிரொளிப்பான்கள் எதிரொளிக்கும்
தொலைநோக்கி, ரேடியோ தொலைநோக்கி, நுண்ணலை தொலைபேசிக்கருவி,
சூரிய சமையற்கலன், சூரிய சூடேற்றிகளில் பயன்படுகின்றன.
49. குவியம் - ஒளிக்கற்றையானது கோளக ஆடியில் பட்டு எதிரொளித்த பின் முதன்மை அச்சில் குவியும் புள்ளி
50. குவியத்தொலைவு - ஆடி மையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு.
51. கண்ணாடிகளுக்கு பதிலாக ஒளியிழைகள் பயன்படுத்தப்படுவது உயர் காட்சித்திறன் பெற.
52. ஒரு வண்ணத்தின் ஒளிவிலகல் அதன் அலைநீளத்திற்கு எதிர்தகவில் உள்ளது.
53. சிவப்பு நிற ஒளி அதிக அலைநீளம், குறைந்த விலகல்.
54. ஊதா நிற ஒளி குறைந்த அலைநீளம், அதிக விலகல்.
55. வெள்ளொளி கதிர் நிறப்பிரிகை வானவில்.
56. VIBGYOR
V-violet
I-indigo
B-blue
G-green
Y-yellow
O-orange
R-red
No comments:
Post a Comment