4.வெப்பவியல்
1. பகுதிக்கு அணுக்கள் (அ) வெப்ப ஆற்றலானது வெப்பமான பகுதியிலிருந்து குளிர்ச்சியான பகுதிக்கு பரவுகிறது.
2. ஓரு பொருளுக்கு வழங்கப்படும் வெப்ப ஆற்றல் அதிலுள்ள அணுக்கள் (அ) மூலக்கூறுகள் ஆற்றலை அதிகரிக்கின்றன.
3. வெப்ப ஆற்றலினால் விரிவடைதல், வெப்பநிலை உயர்வு மற்றும் நிலைமாற்றம் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன..
4. வெப்பத்தினால் வாயுக்கள் அதிகளவு விரிவடைகின்றன.
5. தண்டவாளங்கள் கோடைகாலங்களில் வெப்பத்தால் விரிவடைவதால் இடைவெளி விடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.
6. திடப்பொருள் திரவமாக மாறுதல் உருகுதல்
7. திரவம் வாயுவாக மாறுதல் - ஆவியாதல்.
8. திடப்பொருள் வாயுவாக மாறுதல் பதங்கமாதல்
9. வாயு திரவமாக மாறுதல் குளிர்தல்.
10. திரவம் திடப்பொருளாக மாறுதல் உறைதல்
11. வாயு திடப்பொருளாக மாறுதல் படிதல்
12. இயற்கையாகவே புவியின் மீது திண்மம் திரவம் வாயு ஆகிய முன்று நிலைகளிலும் காணப்படுகின்ற ஒரே பருப்பொருள் நீர்
13. வெப்பபரிமாற்றம் நடைபெறும் மூன்று முறைகளாவன
வெப்பக்கடத்தல், வெப்பசலனம், வெப்பக்கதிர்வீசல்
14. திடப் பொருளில் அணுக்கள் நெருக்கமாக அமைந்துள்ளன.
15. ஒன்றுடன் ஒன்றுடன் தொடர்பிலுள்ள இரு திடப்பொருளின் அதிக வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வு வெப்பக்கடத்தல்.
16. உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும் முறை வெப்பச்சலனம்.
17. வெப்பச்சலனம் திரவம் மற்றும் வாயு பொருட்களில் நடைபெறுகிறது.
18. வெப்பஆற்றலானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்காந்த
அலைகளாகப் பரவும் முறை - வெப்பக்கதிர்வீசல்.
19. வெப்பச்சலனம் (எ.கா) - நிலக்காற்று, கடல்காற்று நிகழ்வு உருவாதல் பலூன் மேலே உயர்தல் - குளிர்சாதனப் பெட்டி
20. வெப்பக்கதிர்வீசல் (எ.கா) - சூரியனின் வெப்ப ஆற்றல் பூமியை அடைதல்
21. ஓரு பொருளை 500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தும்போது கதிர்வீச்சானது மங்கிய சிவப்பு நிறத்தில் கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது.
22. வெப்பகதிர்வீச்சானது அதிகரிக்கப்படும்போது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தை தொடர்ந்து வெண்மை நிறத்தில் ஒளிரும்.
23. ஒரு பொருள் சூடாக உள்ளதா (அ) குளிர்ச்சியாக உள்ளதா என்பதை அறிய உதவும் இயற்பியல் அளவு வெப்பநிலை .
வெப்பநிலையை அளவிட உதவும் அளவுகோல்கள் செல்சியஸ் அளவுகோல், பாரன்ஹீட் அளவுகோல், கெல்வின் அளவுகோல்.
24. வெப்ப ஆற்றலின் அலகு ஜீல்.(J)
25. வெப்பத்தை அளவிட பொதுவாக பயன்படுத்தப்படும் அலகு கலோரி
26.1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அலகு 1 கலோரி.
27. கலோரி மற்றும் ஜீல் அலகுகளுக்கிடையேயான தொடர்பு 1 கலோரி = 4.189J
28. உணவுப்பொருளில் உள்ள ஆற்றலின் அளவு -கிலோ கலோரி.
29. பொருள் ஒன்று ஏற்கும் (அ ) இழக்கும் வெப்பத்தின் அளவானது பொருளின் நிறை , பொருளின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம், பொருளின் தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது.
30. ஓரு பொருள் குறிப்பிட்ட வெப்பநிலையை அடைய தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு வெப்ப ஏற்புத்திறன்.
31. ஒருபொருளின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் (அ) 1 கெல்வின் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு வெப்ப ஏற்புத்திறன்.
32. வெப்ப ஏற்புத்திறன் SI அலகு J/K
33. ஓரலகு நிறையுடைய பொருளின் வெப்ப ஏற்புத்திறன் - தன் வெப்ப ஏற்புத்திறன்.
34. 1கிகி நிறையுடைய பொருளின் வெப்பநிலையை 1டிகிரி செல்சியஸ் (அ)
1கெல்வின் அளவு உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு தன்வெப்ப ஏற்புத்திறன்.
35. தன் வெப்ப ஏற்புதிறனின் SI அலகு J/Kg.K
36. பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட (அ) இழக்கப்பட்ட வெப்பத்தை அளவிடப் பயன்படும் உபகரணம் - கலோரிமீட்டர்.
37. கலோரி மீட்டரானது தாமிரம் (அ) அலுமினியம் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது
38. வேதியல் மாற்றங்களால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் அளவை அளவிட பனிக்கட்டி கலோரிமீட்டர் பயன்படுத்தப்பட்டது.
39. பனிக்கட்டி கலோரிமீட்டர் முதலில் 1782 ஆம் ஆண்டு ஆன்டொய்ன் லவாய்சியர்
மற்றும் பியரே சைமன் லாப்லாஸ் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டது.
40. ஓரு பொருளின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனம் வெப்பக்கட்டுப்படுத்தி.
41. தெர்மோஸ்டாட் என்பது கிரேக்க வார்தையிலிருந்து பெறப்பட்டது.
42. தெர்மோ - வெப்பம் ஸ்டாட் அதே நிலையில் இருப்பது
43. பொருளின் வெப்பநிலையை அதன் சுற்றுப்புறத்தின் வெப்பநிலையை விட அதிகரித்துவிடாமல் (அ) குறைந்துவிடாமல் நீண்ட நேரம் வைத்திருக்க கூடிய வெப்பத்தை கடத்தாத சேமிப்புகலன் - வெப்பக்குடுவை.
44. வெப்பக்குடவை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1892 - ஸ்காட்லாந்து அறிவியலாளர் சர் ஜேம்ஸ் திவார்.
45. திவார்குடுவை திவார் பாட்டில் எனப்படுவது வெப்பக்குடுவை.
46. ஒருபொருளின்(அ)இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனம் வெப்பக்கட்டுப்படுத்தி.
No comments:
Post a Comment