அளவீட்டியல்
CGS,MKS, SI அலகுமுறைகள் மெட்ரிக் அலகு முறைகள் ஆகும்.
1. அளவீட்டு முறைகளில்
நீளம் | நிறை | காலம் | |
FPS | அடி | பவுண்டு | வினாடி |
CGS | செ.மீ. | கிராம் | வினாடி |
MKS | மீட்டர் | கிலோகிராம் | வினாடி |
2. SI அலகு முறைகளில்
நீளம் | மீட்டர் |
நிறை | கிலோகிராம் |
காலம் | வினாடி |
வெப்பநிலை | கெல்வின் |
மின்னோட்டம் | ஆம்பியர் |
பொருளின் அளவு | மோல் |
ஒளிச்செறிவு | கேண்டிலா |
3. SI அலகு முறை அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு 1960
4. .SI அலகு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1971.
5. ஒரு பொருள் பெற்றிருக்கும் வெப்பத்தின் அல்லது குளிர்ச்சியின் அளவே வெப்பநிலை ஆகும்.
6. வெப்பநிலையை செல்சியஸ் , கெல்வின் மற்றும் பாரன்ஹீட் அளவுகளில் மாற்றுவதற்கான வாய்ப்பாடு
வெப்பநிலை அளவீடு | கீழ்நிலைப்புள்ளி | மேல்நிலைப்புள்ளி | பிரிவுகளின் எண்ணிக்கை |
செல்சியஸ் | 0°C | 100°C | 100 |
பாரன்ஹீட் | 32°F | 212°F | 180 |
கெல்வின் | 273K | 373K | 100 |
9. மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி அம்மீட்டர் .
10. அதிவேகமாக செல்லும் புல்லட் ரயில்களைத் தண்டவாளத்திலிருந்து உயர்த்தப் பயன்படுவது மீக்கடத்திகள் .
11. ஓளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக்கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு ஒளிச்செறிவு எனப்படும்.
12. ஒரு மோல் என்பது 6.023X 1023
13. எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவுத் தோராயமாக ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.
14. ஒளிச்செறிவினை நேரிடையாக அளவிடும் கருவி ஒளிமானி ஆகும்
15. ஒளிபாயம் (அ) ஒளிதிறன் என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்
16. ஒளிதிறனின் SI அலகு லுமென் ஆகும்.
17. இருநேர்கோடுகள் (அ) இருதளங்கள் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் தளக்கோணம் எனப்படும்.
18. தளக்கோணத்தின் SI அலகு ரேடியன் (rad)
19. திண்மக்கோணத்தின் SI அலகு ஸ்ட்ரேடியன் (Sr).
20. ஒரு கோளத்தின் ஆரத்தின் இருமடிக்குச் சமமான புறப்பரப்பு கொண்ட சிறிய வட்டப்பகுதி ஒன்று மையத்தில் ஏற்படுத்தும் கோணம் ஸ்ட்ரேடியன் எனப்படும்
21. தளக்கோணம் மற்றும் துணை அளவுகள் ஆகியவை 1995ல் வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
22.𝝅 ரேடியன் =180
23. 1 ரேடியன் = 180/ 𝝅
24. மூன்று (அ) அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும் போது உருவாகும் கோணம் திண்மக்கோணம் எனப்படும்.
25. இருபரிமாணம் கொண்ட கோணம் தளக்கோணம்
26. முப்பரிமாணம் கொண்ட கோணம் திண்மக்கோணம் .
27. குவார்ட்ஸ் கடிகாரத்தின் துல்லியத்தன்மையானது 100 வினாடிக்கு ஒரு வினாடி ஆகும்.
28. குவார்ட்ஸ் கடிகாரமானது மின்னனு அலைவுகள் மூலம் இயங்குகின்றன
29. குவார்ட்ஸ் கடிகாரத்தில் பயன்படும் தத்துவம் படிகத்தின் அழுத்த மின் பண்பு (Piezo - electric property).
30. அணுக்கடிகாரம் அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது.
31. அணுக்கடிகாரத்தின் துல்லியத்தன்மை 1013 வினாடிக்கு ஒரு வினாடி.
32. GPS, GLONASS மற்றும் பன்னாட்டு நேரப்பங்கீட்டு அமைப்பில் பயன்படும் கடிகாரம் அணுக்கடிகாரம் .
33. அணுக்கடிகாரம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1949 .
34. துல்லியமான அணுக்கடிகாரம் 1955 ஆம் ஆண்டு லூயிஸ் ஈசான் மற்றும் ஜாக்பென்னி ஆகியோரால் சீசீயம் -133 அணுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
35. எண்ணியல் கடிகாரம் எனப்படுவது மின்னியல் கடிகாரங்கள் ஆகும்.
36. கிரீன்விச் சராசரி நேரம் எனப்படுவது இங்கிலாந்து நாட்டில் கிரீன்விச் என்னுமிடத்தில் இராயல் வானியல் ஆய்வுமையம் வழியாக செல்லும் தீர்க்க கோடானது தொடக்க கோடாக கொள்ளப்படுகிறது.
37. புவியானது 15 இடைவெளியில் அமைந்த தீர்க்க கோடுகளின் அடிப்படையில் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேர மண்டலம் எனப்படும்
38. இரு அடுத்தடுத்த நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள கால இடைவெளி 1 மணிநேரம் ஆகும்.
39. இந்திய திட்ட நேரம் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் கொண்டு கணக்கிடப்படுகிறது.
40. இந்திய திட்டநேரம் = கிரீன்விச்நேரம் +5.30மணி.
41. உண்மையான மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த மதிப்பை கண்டறியும் முறை தோராய முறை எனப்படும்.
42. ஆங்கிலேய அலகீட்டு முறை FPS
43. அளவீடுகளின் நிலையற்ற தன்மை பிழைகள் எனப்படும்.
44. SI அலகுமுறையில் 7 அடிப்படை அளவுகளும் 10 வழி அளவுகளும் உள்ளது
45. அவோகெட்ரா எண்ணின் மதிப்பு 6.023 X 1023
46. அகச்சிவப்புகதிர் வெப்பநிலைமானி மூலம் ஒரு பொருளை நேரடியாக தொடாமல் அதன் வெப்பநிலையை அளக்கமுடியும்.
47. அமைப்பு ஒன்றில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றல் வெப்பநிலை எனப்படும்
படித்த பின்னர், இங்குள்ள தேர்வினை எழுதவும்.CLICK HERE
No comments:
Post a Comment