Friday, July 30, 2021

9th Tamil - திராவிட மொழிக்குடும்பம்

 திராவிட மொழிக்குடும்பம்

குறுவினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

நான் பேசும் மொழியான தமிழ், தென் திராவிட மொழிகளுள் ஒன்றாக இருக்கிறது.


சிறுவினா

1. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

  • திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளை உடையது.
  • மலையாள மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்து கொள்ள முடியும்.
  • தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

2. மூன்று என்னும் எண்ணுப் பெயர் பிறதிராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. மூன்று என்னும் தமிழ் எண்ணுப் பெயர் பிற திராவிட மொழிகளில் பின்வருமாறு அமையும்.

திராவிட மொழிகள்தமிழ்தெலுங்குமலையாளம்
கன்னடம்
மாற்றம்மூன்றுமூடுமூணுமூருமூஜி


நெடுவினா

1.திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை

எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

முன்னுரை :

திராவிட மொழிகளுள் முதன்மையாக விளங்குவது தமிழ். எத்தகைய காலமாற்றத்திலும் மாறிவரும் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டவரும் செம்மொழித் தன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்து வருகின்றனர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள் :

சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் ஆகும். இதற்கு அடிச்சொல் என்றும் பெயர். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் காணமுடிகிறது.

சான்று :

அடிச்சொல்திராவிட மொழிகள்
கண்தமிழ்
கண்ணுமலையாளம், கன்னடம்
கன்னுதெலுங்கு, குடகு
அடிச்சொல்திராவிட மொழிகள்
ஃகன்குரூக்
கெண்பர்ஜி
கொண்தோடா

திராவிட மொழிகளின் எண்ணுப் பெயர்களும் ஒன்று போலவே அமைந்துள்ளன.

சான்று :

திராவிட மொழிகள்தமிழ்தெலுங்குமலையாளம்
கன்னடம்
ஒன்றுஒகடிஒண்ணுஒந்துமூருஒஞ்சி

திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ் மொழி திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது. தமிழின் பல அடிச் சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளின் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப் பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

நிறைவுரை :

திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாகத்திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குத் துணையாக அமைந்துள்ளது.

 

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District