Saturday, July 31, 2021

10th Tamil - தமிழ்சொல் வளம்

விடைக் குறிப்புகள்





பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

வினா 1.
‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
விடை :
ஈ) சருகும் சண்டும்
வினா 2.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
அ) குலை வகை
ஆ) மணி வகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை
விடை :
ஆ) மணி வகை

குறுவினா

வினா 1.
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
விடை :

சரியான தொடர்கள் பிழையான தொடர்
ஒரு தாற்றில் பல சீப்பு
வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு
வாழைப்பழங்கள் உள்ளன.
பிழைக்கான காரணம்:
தாறு- வாழைக்குலை
சீப்பு - வாழைத் தாற்றின் பகுதி
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

 சிறுவினா

வினா 1.
‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
விடை :
பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன் .
வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
நாற்று – நெல் நாற்று நட்டேன்.
கன்று – வாழைக்கன்று நட்டேன்.
பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.
 

நெடுவினா

வினா 1.
தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
விடை :

குறிப்புச் சட்டம்
அறிமுகவுரை
சொல்வளம்
சொல்லாக்கத்திற்கான தேவை
நிறைவுரை

 அறிமுகவுரை:
சொல்வளம் சொல்லாக்கத்திற்கான தேவை நிறைவுரை அறிமுகவுரை: வணக்கம்! அன்னைமொழியே! அழகார்ந்த செந்தமிழே! எனப் போற்றப்படும் தமிழ்மொழி பிறமொழிகளுக்கெல்லாம் தலைச்சிறந்த மொழியாகும். அம்மொழியின் சொல்வளத்தைப் பற்றிக் காண்போம்.

சொல்வளம்:
இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலை சிறந்ததாகும். தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாம். ஒருபொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகராதிகளிலும் காணப்படவில்லை . “பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள்” என்கிறார் கால்டுவெல்.

சொல்லாக்கத்திற்கான தேவை:
சொல்லாக்கத்திற்கான தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நூல்களைப் புதிய சொல்லாக்கத்துடன் படைத்தல் வேண்டும். இலக்கிய மேன்மைக்கும் மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், புதிய சொல்லாக்கம் தேவை. மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். தமிழின் பெருமையும் மொழியின் சிறப்பும் குன்றாமல் இருக்க தமிழில் புதிய சொல்லாக்கம் தேவை. உலகின் பிற ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழ்ப்படுத்தி எழுதும் போது பிறமொழி அறியாத தமிழரும் அவற்றைக் குறித்து அறிந்துகொள்ள முடியும். மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி. அதை நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.
மக்களிடையே பரந்த மனப்பான்மையையும், ஆளுமையையும் நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவைப்படுகிறது. பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருக்க காலத்திற்கேற்ப புதிய கலைச்சொல்லாக்கம் ஏற்படுத்த வேண்டும்.

நிறைவுரை:

மென்மையான தமிழை மேன்மையான தமிழாக்க அறிவியல் தொழில்நுட்பச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழின் பெருமையை உலகிற்குக் கொண்டு செல்வோம்.                                                  

புதிய சொல்லாக்கத்தின் சேவை
இன்றைய தமிழுக்குத் தேவை

கற்பவை கற்றபின்

வினா 1.
பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.
தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.
விடை :
தரிசு நிலம் : பயிர் செய்யாத நிலம்
சிவல் நிலம் : செந்நிலம் அல்லது சிவந்த நிலம்
கரிசல் நிலம் : கரிய நிறமுடைய மண் கொண்ட நிலம் கரிசல் நிலம் (அ) கரிந்த பாலை நிலம்
முரம்பு நிலம் : பருக்கைக் கற்கள் கொண்ட மேட்டு நிலம்
புறம்போக்கு நிலம் : ஊர்ப்புறத்தே குடிகள் வாழ்தலில்லாத நிலம்
சுவல் நிலம் : மேட்டு நிலம்
அவல் நிலம் : ‘அவல்’ என்பதன் பொருள் ‘பள்ளம்’. ஆகவே பள்ளமான நிலப்பகுதி அவல் என அழைக்கப்படுகிறது. விளை நிலமாகவும் அமைகிறது.

 வினா 2.
ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக.
எ.கா: சொல்லுதல் – பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்
விடை :
அ) மலர்தல் – அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல்.
ஆ) ஞாயிறு – I சூரியன், கதிரவன், வெய்யோன், பகலவன், பரிதி.
இ) அரசன் – கோ, கொற்றவன், வேந்தன், ராஜா, கோன்.
ஈ) அழகு – அணி, வடிவு, பொலிவு, எழில்.
உ) அடி- கழல், கால், தாள், பதம், பாதம்.
ஊ) தீ – அக்கினி, நெருப்பு, தழல்.
எ) அச்சம் – பயம், பீதி, உட்கு .
ஏ) துன்பம் – இன்னல், அல்லல், இடும்பை
ஐ) அன்பு – கருணை , நேசம், ஈரம், பரிவு, பற்று.
ஓ) செய்யுள் – பா, கவிதை, யாப்பு.
ஓ) பெண் – நங்கை, வனிதை, மங்கை.
ஔ) வயல் – கழனி, பழனம், செய்.

வீடியோ

source:Klavi tv

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District