Thursday, September 17, 2020

ஆங்கிலம் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் - பகுதி 2.

 

ஆங்கிலம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்த்து வருகிறோம் . அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பகுதியினைக் காணலாம். முதல் பகுதிக்கு இங்கு செல்லவும்.

  1. உலகில் 840 மில்லியன் மக்களால் தாய் மொழி மற்றும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் பேசப்படுகிறது.இதன் மூலம் அதிக மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பினைப் பெறுகிறது.

  2. ஆங்கிலம் 67 நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. ஹாங்காங் மற்றும் பியூர்டோ ரிகோ ஆகிய இறையான்மை அல்லாத நாடுகளும் இதில் அடங்கும்.

  3. “long time no see” என்பது இலக்கணப்படி தவறு.

  4. “Go!” என்பது இலக்கணப்படி அமைந்த மிகக் குறுகிய சரியான வாக்கியமாகும்.

  5. butterfly என்பதன் சரியான பெயர் flutterby.

  6. ஆண்டிற்கு 4,000 ஆங்கில வார்த்தைகள் அகராதியில் சேர்க்கப்படுகிறது.

  7. I மற்றும் you ஆகிய இரு வார்த்தைகள் தான் ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்.

  8. உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் கொஞ்சமாவது ஆங்கிலம் பேசத் தெரிந்துள்ளனர்.

  9. அதிகமாகப் பயன்படுத்தப்படும் adjective - Good

  10. அதிகமாகப் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொல் noun - ‘time’.

  11. ‘set’ எனும் வார்த்தைக்கு தான் ஆங்கிலத்தில் அதிக அர்த்தங்கள் உள்ளது.

  12. Month, orange, silver, and purple ஆகிய வார்த்தைகள் மற்ற எந்த ஆங்கில வார்த்தையுடனும் ஒலி இயைபு ( rhyme) பெறாது.

  13. உலகில் கணினியில் சேமித்து வைக்கப்படும் 80 சதவீத தகவல்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

  14. பேசும் போது நாம் பய்ன்படுத்தும் ‘like’ or ‘basically’, ஆகிய வார்த்தைகள் crutch words என அழைக்கப்படுகிறது.

  15. 90% ஆங்கில உள்ளடக்கங்கள் வெறும் 1,000 வார்த்தைகளில் உருவாகிறது.

    16. அமெரிக்காவில் 26 வகையான வட்டார வழக்கு ஆங்கில மொழி உள்ளது.

    17. ‘lol’ எனும் வார்த்தை ஆக்ஸ்போர்டு அகராதியில் 2011 இல் சேர்க்கப்பட்டது.

    18. birthplace, blushing, undress, torture மற்றும் பல வார்த்தைகளை சேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் சேர்த்துள்ளார்.

    19. 'god be with you’ எனும் பழமையான ஆங்கில வார்த்தையில் இருந்து வந்தது.

    20. ‘ee’ எனும் வார்த்தையினை 7 விதமாக உச்சரிக்கலாம்.

    கீழ்கானும் வாக்கியத்தில் அந்த ஏழு வகைகளும் உள்ளன.

    ‘He believed Caesar could see people seizing the seas’.

    21. சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் காலப்போக்கில் மாறியுள்ளன. (உ.ம்)

    ‘awful’ - ‘inspiring wonder’ ( ‘full of awe’,)

    ‘nice’- ‘silly’

    22. 1755 இல் தான் ஆங்கிலத்திற்கான முதல் அகராதி அச்சிடப்பட்டது.

    23. ‘town’. எனும் வார்த்தை பழமையான ஆங்கில வார்த்தை ஆனால் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

     

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms