Sunday, July 26, 2020

இலவச கல்வி மென்பொருள்கள்

image credits:quora

இன்றைய காலகட்டத்தில் நவீனமுறையில் கற்றல் கற்பித்தலில் ஈடுபடவேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கல்வித் துறையிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை தேடிப் படிக்கும் காலம் எப்போதோ வந்துவிட்டது. ஆசிரியர்கள் அவர்களது வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை எனில் மாணவர்கள் நம்மிடம் இருந்து விலகிப் போகும் சூழல் வந்துவிடும். எனவே அவர்களின் கற்றல் வேகத்திற்கு நாமும் ஏடுகொடுக்க வேண்டும். காரணம் மாணவர்களுக்கு எப்போதுமே ஆசிரியர்கள் தான் ஹீரோ.

சரி தற்போது கற்றல் கற்பித்தலுக்காக இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களின் பட்டியலினை இங்கு காணலாம்.

திறமூல மென்பொருள் (Open Source) பற்றி அறிய :https://mynangurschool.blogspot.com/2020/07/open-source-software.html

1.Anki

இது ஒரு திறமூல மென்பொருள் ஆகும். நினைவு திறனை அதிகரிக்கும் விதமாக Flash Card வடிவமைக்க இது பயன்படுகிறது. ஜப்பானிய வார்த்தையில் அங்கி என்றால் மனப்பாடம் செய்தல் என்று பொருள்.இதனை Windows, Mac, Linux, iOS, Android போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.

இதனை தரவிறக்கம் செய்ய :https://apps.ankiweb.net/

2.C.a.R.

இது C.a.R.Compass and Ruler என்பதன் சுருக்கம் ஆகும். வடிவியல் செய்முறைகளை செய்ய பயன்படும் திறமூல மென்பொருள் ஆகும். இது பயனருடன் தொடர்பில் இருத்தல் ( interactive) வகையிலான மென்பொருள் ஆகும். இது GNU General Public License (GPL) லைசன்சில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை கணினியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

தரவிறக்கம் செய்ய: http://car.rene-grothmann.de/doc_en/index.html

3. GeoGebra

இதுவும் வடிவியல் செயல்முறைகளுக்குப் பயன்படும் இலவச மென்பொருள் ஆனால் திறமூல மென்பொருள் அல்ல. இதனை Windows, Mac, Linux, iOS, Android போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.

இதனைத் தரவிறக்கம் செய்ய: https://www.geogebra.org/

4. DrGeo

இதுவும் வடிவியல் செயல்முறைகளுக்குப் பயன்படும் இலவச மென்பொருள் ஆனால் திறமூல மென்பொருள் அல்ல.இருந்தபோதிலும் இதன் சோர்ஸ் கோட், மொழிபெயர்ப்பு வசதி ஆகியன க்னூ லைசன்சில் வழங்கப்பட்டுள்ளது. இதனை Windows, Mac, Linux, iOS, Android போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய :http://www.drgeo.eu/

5. Fresh Memory (software) :

நினைவு திறனை அதிகரிக்கும் விதமாக Flash Card வடிவமைக்க இது பயன்படுகிறது.

6. eLML

eLesson Markup Language என்பதன் சுருக்கம் ஆகும். இது எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பாடங்களை நடத்த பயன்படும் திறமூல மென்பொருள் ஆகும். தரவிறக்கம் செய்ய :http://www.elml.org/website/en/html/index.html

7. eXeLearning

இது XHTML or HTML5 ஃபார்மட்களில் பாடக் கருத்துக்களை உருவாக்க பயன்படும் ஓர் திறமூல மென்பொருள் ஆகும். தரவிறக்கம் செய்ய :https://exelearning.net/en/caracteristicas/

8. FET (timetabling software)

வகுப்பு கால அட்டவணை (Time Table) தயாரிக்க பயன்படும் ஒரு திறமூல மென்பொருள் ஆகும். தரவிறக்கம்: https://lalescu.ro/liviu/fet/

9. Kig (software)

Geometry வரைய பயன்படுகிறது. தரவிறக்கம்:https://edu.kde.org/kig/

10.Tux, of Math Command

இதில் எளிய கணக்குகளை வீடியோ கேம் விளையாடுவது போல செய்யலாம். தரவிறக்கம் செய்ய : https://sourceforge.net/projects/tuxmath/

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms