Friday, July 17, 2020

திறமூல மென்பொருள் (open-source software)

திறமூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்றொடருடன் வெளியிடப்படும் ஒரு வகை மென்பொருள் ஆகும்.  இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்றொடரை வெளியிடுவார்கள், அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்றொடரைப் படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும்.அதாவது அந்த மென்பொருளில் உள்ள பிழைகளை சரிசெய்யவோ அல்லது தங்களுக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றவோ இயலும். 2008 ஆம் ஆண்டில் ஸ்டாண்டிஷ் குரூப்பின் கூற்றுப் படி வாடிக்கையாளர்களுக்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலரினை மிச்சப்படுத்தியுள்ளது.

வரலாறு

கணினித் துறையின் ஆரம்ப நாட்களில், மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் மேம்பாட்டாளர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும் கணினித் துறையை உருவாக்குவதற்கும் மென்பொருளைப் பகிர்ந்து கொண்டனர். இறுதியில், திறந்த மூல கருத்துத் தோற்றமானது 1970-1980 ஆண்டுகளில் மென்பொருளின் வணிகமயமாக்கலினை நோக்கி நகர்ந்தது. இருப்பினும், கல்வியாளர்கள் சிலர் அவ்வப்போது இணைந்து இதனை உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தனர்.உதாரணமாக 1979 ஆம் ஆண்டில் டொனால்டு நூத் என்பவர் வெளியிட்ட டெக்ஸ் டைப் செட்டிங் மற்றும் 1983 ஆம் ஆண்டில் ரிச்சர்டு ஸ்டால்மேன் 1983 இல்வெளியிட்ட குனூ இயங்குதளம் போன்றவையாகும். 1997 ஆம் ஆண்டில் எரிக் ரேமண்ட் என்பவர் தெ கேதட்ரல் அண்ட் பசார் எனும் பகுப்பாய்வினை வெளியிட்டார். அது கொந்தல்காரர்கள் (ஹேக்கர்) சமூகத்திற்கும் இலவச மென்பொருள் கொள்கைகள் பற்றியது. இது 1998 ஆம் ஆண்டின் முற்காலத்தில் வெளியிடப்படது. இதனால் உந்தப்பட்டு நெட்ஸ்கஃபே தொலைத் தொடர்பு நிறுவனம் தனது நெட்ஸ்கஃபே கம்மியூனிகேட்டர் இன்டெர்நெட் சூட் என்பதனை மக்களுக்கு இலவசமாக வழங்கியது. இதன் மூல நிரல் தான் சீ மன்கி, மொசில்லார் பயர்பாக்ஸ் , தண்டர்பேர்ட் மற்றும் கோம்பொசெர் ஆகிவற்றிற்கு அடிப்படையானதாக அமைந்தது.

விதிகள்

தெ ஓப்பன் சோர்ஸினிசியேட்டிவ் எனும் உலகளாவிய இலாப நோக்கமற்ற அமைப்பானது 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.இந்த அமைப்பு ஒரு மென்பொருள் திறந்த மென்பொருளாக இருக்க வேண்டுமெனில் சில குறிப்பிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது.

  • மென்பொருள் மறுபகிர்வு செய்யும்வசதி
  • அதன் மூல நிரல் கிடைக்கப்பெறுதல் மற்றும் ஒருமைப்பாடு
  • உரிமங்களின் விநியோகம் மற்றும் பண்புகள்
  • பாகுபாடு எதிர்ப்பு
  • வருவித்த படைப்புகள்

உரிமம்

  1. MIT License
  2. GNU General Public License (GPL) 2.0
  3. Apache License 2.0
  4. GNU General Public License (GPL) 3.0
  5. BSD License 2.0 (3-clause, New or Revised)

பயன்கள்

  1. பணம் மிச்சம்.

  2. அதன் பிழைகளை நாமே சரி செய்யலாம்.நமக்குத் தேவையான விதத்தில் மாற்றியமைக்கலாம்.

  3. மென்பொருள் மேம்பாட்டளர்களுக்கு இது நல்ல கற்றல் வாய்ப்பை வழங்குகிறது.

  4. பிழைகள் விரைவாக சரிசெய்யப்படும்.

  5. பொதுவெளியில் உள்ளதால் அதன் புதிய பதிப்புகள் விரைவில் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms