Thursday, July 30, 2020

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீடு சட்டம் பொருந்தும்

தமிழக அரசு 2010 ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளை , சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளினால் நடத்தப்படும் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 20 பணியாளர்களுக்கு மேல் பணியாற்றினால் அந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றினால் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் (இஎஸ்ஐ) பொருந்தும் என அரசாணை வெளியிட்டது. எனவே இந்த அர்சாணையினை அமல்படுத்துவது குறித்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த அரசாணையினை எதிர்த்து பல தனியார் பள்ளிகளின் நிறுவனர்கள் வழக்குத் தொடர்ந்தது. இதனை அப்போது விசாரித்த கௌல் தலைமையிலான் அமர்வு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறி தடை விதித்தது. பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கேரள உயர்ந்தீமன்ற தீர்ப்பினை மேற்கோள் காட்டி இந்தத் திட்டத்தினை அமல்படுத்தியது. இரு வேறு தீர்ப்புகள் வந்ததால் இதில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தமிழக அரசாணை செல்லுபடியாகும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆதாரம்:தினமனி


No comments:

Post a Comment

கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

 கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்