Tuesday, June 23, 2020

NMMS தேர்வு- ஓர் அறிமுகம் (NMMS Exam -INTRO)

NMMS- National Means-Cum-Merit Scholarship என்பதன் சுருக்கம். இது ஒரு கல்வி உதவித் தொகை திட்டம் ஆகும். இந்தத் திட்டம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.சமூகத்தில் பொருளாதார அளாவில் பின்தங்கியுள்ள நன்றாக கல்வி செயல்களில் ஈடுபடும் மானவர்களுக்கு உதவுவதனை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சுமார் 1,00,000 மாணர்கள் இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தினால் பயனடைகின்றனர்.

இந்த இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

நோக்கம்: மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், நன்றாக படிக்கும் பொருளாதராத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்விக்கு உதவுதல்.

உதவித் தொகை: ஆண்டிற்கு 12,000 ரூபாய் (12 ஆம் வகுப்பு படித்து முடிக்கும் வரை) ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பத்தினை அப்டேட் செய்ய வேண்டும். 10 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் எடுத்தால் தான் உதவித் தொகை பெற இயலும்.

யார் எழுதலாம்: தற்போது 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் கடந்த ஆண்டு 7ஆம் வகுப்பின் இறுதித் தேர்வில் 55% மேலாக மதிப்பெண் பெற்ற அனைவரும்.

யார் எழுத முடியாது: தனியார் பள்ளிகள், கேந்த்ரியா வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுத இயலாது.

விண்ணப்பிக்கும் காலம்: ஜூலை- நவம்பர (மாறுதலுக்கு உட்பட்டது)

வருமான வரம்பு: அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 1.50 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது.

யார் மூலம் விண்ணப்பிக்க்லாம்: தலைமை ஆசிரியர் மூலமாக.


தேர்வு நடைபெறும் முறை

தேர்வு இரு வகைகளில் நடைபெறும்

  1. MAT- Mental Ability Test

  2. SAT- Scholastic Aptitude Test

7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து வரும்.

https://apply1.tndge.org/login click this page to apply

related posts


NMMS தேர்விற்கான STUDY MATERIALS        click here

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NTSE தேர்வு பற்றி அறிய click here



No comments:

Post a Comment

கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

 கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்