Friday, June 19, 2020

தொலைந்து போன மேல்நிலை சான்றிதழ்களைப் பெறுவது எப்படி (how to apply duplicate hse certificate)


தொலைந்து போன மேல்நிலை வகுப்பு (12 ஆம் வகுப்பு) சான்றிதழ்களை பெறுவதற்கு கீழ்கானும் அறிவுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

பள்ளியில் பயின்ற மாணவர்கள் (Regular Student)

  1. அந்த சான்றிதழ் கிடைக்கவாய்ப்பிலை என வருவாய் துறை அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

  2. சான்றிதழ் தொலந்துவிட்டதாக செய்தித் தாளில் விளம்பரம் செய்தல்.

  3. இரண்டாம் படிக் கட்டணமான 505 ரூபாய் எனும் கட்டணத்தினை வங்கியில் செலுத்த வேண்டும். முன்பாக தொடர்புடைய கருவூலத்திற்குச் சென்று அவர்களிடம் இருந்து செலுத்துச் சீட்டினைப் பெற வேண்டும்.

  4. பணம் செலுத்திய சீட்டுடன் இறுதியாக படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அனுகி அவ்ரின் மூலமாக மட்டுமே சான்றிதழ் நகல் பெற முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாறாக தனியாக அனுப்பும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

தனித் தேர்வர்கள் (Private Canditates)

தனித் தேர்வர்களாக இருக்கும்பட்சத்தில் இணைப்பில் கானும் படிவத்தில் பக்கம் 2 இல் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து கையெழுத்து பெற்று மேற்கானும் வழிமுறைகளின் படி

அரசுத் தேர்வு இயக்குநரின் கூடுதல் செயலாளர்,

சென்னை-600006


எனும் முகவரிக்கு நேரடியாகவே விண்ணப்பிக்கலாம்.


படிவம்: download

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms