கணிதப் புதிர்கள்

Puzzle and Riddles - Google Play இல் உள்ள ஆப்ஸ் 

இங்குள்ள புதிர்களுக்கான விடைகள் இங்கு உள்ளது.


 மாணவர்கள் தங்களது கணிதம் பற்றிய புரிதல்களை வளர்த்துக் கொள்ள கீழ்கானும் புதிர்கள் உதவும்.


1.ஒரு விமானம் மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் அதே விமானம் திரும்பி வருவதற்கு 80 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. அது ஏன்?

2. இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு பணத்தினைப் பரிசாகக் கொடுத்தனர். அதில் ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். பின்னர் இரண்டு மகன்களும் சேர்ந்து தங்களுக்குக் கிடைத்த பணத்தினை எண்ணிப் பார்த்த போது மொத்தமாகவே 150 ரூபாயே இருந்தது. இது எப்படி சாத்தியம்?

3. இரண்டு இலக்கங்களைக் கொண்டு எழுதக்கூடிய மிகச் சிறிய முழு எண் என்ன?

4. 0 முதல் 9 வரை பத்து பல வகை எண் முறை இலக்கங்களில் எல்லாவற்றையும் பயன்படுத்தி 1யை கொண்டு வர முடியுமா?

5. ஐந்து 9களைக் கொண்டு 10யை எழுத முடியுமா?

6. ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100யை கொண்டு வருவதற்கான நான்கு வெவ்வேறு வழிகளைக் காட்டுங்கள்.

7. நான்கு 1களைக் கொண்டு எழுதக்கூடிய மிகப் பெரிய எண் எது?

8. படத்தில் உள்ள வட்ட வடிவக் கடிகாரத்தினைப் பாருங்கள். இதை 6 துண்டுகளாகப் பிரிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு துண்டிலும் கிடைக்கும் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை ஒரே மாதிரி வர வேண்டும். வாங்க உங்க அறிவை சோதிச்சுப் பார்க்கலாம்!

File:Round clock 3.19.svg - Wikimedia Commons

9. ஒரு முக்காலியின் மூன்று கால்கள் வெவ்வேறு நீளமுடையதாக இருந்தாலும்கூட, முக்காலி சாய்ந்துவிடாமல் உறுதியாக நிற்குமென்று எனது நண்பர் சொல்கிறார். இது சரிதானா?

 

10. விளாம்பழம் புதிர் : Click Here

11. 1ரூ எங்கே போனது

12. குறுக்கெழுத்து போட்டி 1

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms