Sunday, August 9, 2020

புதிர்கள்

 ஒரு பழக்கடைக்காரர் விளாம்பழங்களை விற்று வந்தார்.அவர் அசந்த நேரம் பார்த்து சில சிறுவர்கள் பழங்களை திருடி சென்றுவிட்டனர்.பழக்கடைகாரர்

அரசனிடம் சென்று முறையிட்டார்.அரசன் உன்னிடம் எத்தனை பழங்கள் இருந்தன என்று கேட்டார்.அதற்க்கு பழக்கடைகாரர் அரசனிடம் எனக்கு கணக்கு தெரியது ஆனால் என்னிடம் பழங்களை இரண்டு இரண்டாக பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும் ,மூன்று மூன்றாக பிரித்தால் இரண்டு பழம் மிஞ்சும்,நான்கு நான்காக பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும் ஐந்து ஐந்தாக பிரித்தால் நான்கு பழம் மிஞ்சும், ஆறு ஆறாக பிரித்தால் ஐந்து பழம் மிஞ்சும் ஏழு ஏழாக பிரித்தால் ஒன்றும் மிஞ்சாது . அரசனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை பின் அமைச்சர் விளக்கினார். 

அமைச்சரின் விடை உங்களுக்கு தெரியுமா ?

அமைசரின் விடை
7 :ன் மடங்குகள் 7,14,21,28,35,42,49,56,63,70,77,84,91,98,105,112,119,126.............

2ஆல் வகுத்தால் 1 வருவது : 7,21,35,49,63,77,91,105,119.....
3ஆல் வகுத்தால் 2 வருவது : 35,77,119........ 
4ஆல் வகுத்தால் 3 வருவது : 35,119..
5ஆல் வகுத்தால் 4 வருவது :119...
6ஆல் வகுத்தால் 5 வருவது :119
7ஆல் வகுத்தால் மீதி வராது எனவே பழக்கடைக்காரரிடமிருந்த பழங்கள் 119 ஆகும்.நமது பழந்தமிழரின் கணித திறனை உலகிற்கு பறைசாற்றும் கணக்கதிகாரத்தில் இருந்து மேலும் ஒரு புதிரை பதிவிடுகிறேன்


         “ முப்பத்தி ரண்டு முழம்உளமுப் பனையைத்
          தப்பாமல் ஒந்தி தவழ்ந்தேரிச்-செப்பமுடன்
          சாணேறி நான்கு விரற்கிழியும் என்பரே
          நாணா தொருநாள் நகர்ந்து “

ஒரு பனைமரம் 32 முழம் உயரமுடையது .பச்சோந்தி  ஒன்று அதிலேற முயற்சி செய்தது.அது ஒரு நாளைக்கு சாண் ஏறி , நாலு விரல் கீழே இறங்குகிறது எனில் எத்தனை  நாளில் பச்சோந்தி பனைமரத்தை ஏறி முடிக்கும் ?

விளக்கம்
முதலில் பனை மர உயரமான 32 முழத்தை விரற்கடையாக மாற்ற வேண்டும்
12 விரற்கிடை= 1 சாண் ,
2 சாண் = 1 முழம் ,
இதன் மூலம் 24 விரற்கடை = 1 முழம் எனவும் நாம் அறிகிறோம்
எனவே 32 முழம்  ஆனது 32*24=768 விரற்கடை ஆகும் .

பச்சோந்தி நாள் ஒன்றுக்கு  12 விரற்கடை ( 1 சாண் ) ஏறி  நாலு விரற்கடை கீழிறங்குகிறது  .எனவே அது  ஒரு நாளுக்கு (12 – 4=8) 8 விரற்கடை ஏறும்.

பச்சோந்தி மரம் ஏற ஆகும் நாட்கள்
                 768/8 =96
ஆகவே பச்சோந்தி 96 நாட்களில் மரத்தை ஏறி முடிக்கும்

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms