Monday, September 12, 2022

புறப்பொருள் இலக்கணம்

புறப்பொருள் இலக்கணம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்……………………..
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
இ) வலிமையை நிலைநாட்டல்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….
அ) புறத்திணை
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறத்திணை

Question 2.
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) ஒன்பது
ஆ) பதினொன்று
இ) பன்னிரண்டு
ஈ) பதிமூன்று
Answer:
இ) பன்னிரண்டு

Question 3.
வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) மல்லிகைப்பூ
ஆ) இட்லிப்பூ
இ) சங்குப்பூ
ஈ) உன்னிப்பூ
Answer:
ஆ) இட்லிப்பூ

Question 4.
ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….
அ) பெருந்திணை
ஆ) பொதுவியல்
இ) கைக்கிளை
ஈ) கொடையை
Answer:
இ) கைக்கிளை

Question 5.
‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?
அ) போர்
ஆ) வெற்றி
இ) ஆநிரைமீட்டல்
ஈ) மதில் வளைத்தல்
Answer:
ஆ) வெற்றி

Question 6.
‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) முல்லை
ஈ) பாலை
Answer:
ஆ) மருதம்

Question 7.
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….
அ) கோட்டையைக் காக்க
ஆ) மன்னனைக் காக்க
இ) ஆநிரைக் கவர
ஈ) வலிமையை நிலைநாட்ட
Answer:
அ) கோட்டையைக் காக்க

Question 8.
பாடாண் திணை பிரித்து எழுதுக.
அ) பாடாண் + திணை
ஆ) பாடாண் + ஆண் + திணை
இ) பாடு + ஆண் + திணை
ஈ) பாட + ஆண் + திணை
Answer:
இ)பாடு+ஆண்+திணை

Question 9.
காஞ்சி என்பது ஒரு வகை …………………….
அ) நெடுமரம்
ஆ) குறுமரம்
இ) குறுஞ்செடி
ஈ) புதர்ச்செடி
Answer:
ஆ) குறுமரம்

Question 10.
போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….
அ) கோட்டை வளைத்தல்
ஆ) போரிடல்
இ) ஆநிரை கவர்தல்
ஈ) கோட்டை காத்தல்
Answer:
இ) ஆநிரை கவர்தல்

Question 11.
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.
அ) கோட்டையை
ஆ) ஆநிரைகளை
இ) நிலத்தை
ஈ) வீரத்தை
Answer:
ஆ) ஆநிரைகளை

Question 12.
மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….
அ) பாடாண் திணை
ஆ) பொதுவியல் திணை
இ) வாகைத் திணை
ஈ) நொச்சித் திணை
Answer:
அ) பாடாண் திணை

Question 13.
அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.
அ) அகப்பொருள்
ஆ) புறப்பொருள்
இ) நுண்பொருள்
ஈ) ஐவகைநிலம்
Answer:
அ) அகப்பொருள்

Question 14.
கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….
அ) வெட்சி
ஆ) வஞ்சி
இ) கரந்தை
ஈ) உழிஞை
Answer:
இ) கரந்தை

Question 15.
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்
2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்
3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

Question 17.
பொருத்துக.
1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்
2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்
3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்
4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 18.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
அ) 8

Question 19.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
ஈ) 4

Question 20.
அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்
அ) கைக்கிளை, பெருந்திணை
ஆ) பொதுவியல், பாடாண்
இ) வெட்சி, கரந்தை
ஈ) நொச்சி, உழிஞை
Answer:
அ) கைக்கிளை, பெருந்திணை

Question 21.
முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப் பூ
இ) வெட்சிப் பூ
ஈ) நொச்சிப் பூ
Answer:
அ) உழிஞைப் பூ

Question 22.
மருத நிலத்திற்குரியப்பூ …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப்பூ
இ) வெட்சிப்பூ
ஈ) நொச்சிப்பூ
Answer:
ஈ) நொச்சிப்பூ

Question 23.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) வெட்சித்திணை – ஆநிரை கவர்தல்
ஆ) கரந்தைத்திணை – ஆநிரை மீட்டல்
இ) வஞ்சித்திணை – மண்ணாசை காரணமாக போர்
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்
Answer:
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Question 24.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) காஞ்சித்திணை – எதிர்த்துப் போரிடல்
ஆ)நொச்சித்திணை – கோட்டை காத்தல்
இ) உழிஞைத்திணை – மதில் வளைத்தல்
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி
Answer:
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

 

 

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District