சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது;
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது;
கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது.
மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத் தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனவும் அழைக்கப் பெறுகின்றன .
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், சேர மரபைச் சேர்ந்தவர்.
மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.
கோவலன் கண்ணகி கதையைக் கூறி, ’அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ’நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்’ என இக்காப்பியம் படைத்தார் என்பர்.
பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் திருவரங்கம் மற்றும் உறையூர் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர்.
தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்; இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால்குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன . அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம். கோவலனனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார் . மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள். |
உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்)
உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை.
இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு. வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம். இதனைச் செய்யுளா கிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை. |
I. சொல்லும் பொருளும்
- சுண்ணம் – நறுமணப்பொடி,
- காருகர் – நெய்பவர் (சாலியர்),
- தூசு – பட்டு
- துகிர் – பவளம்
- வெறுக்கை – செல்வம்
- நொடை – விலை
- பாசவர் – வெற்றிலை விற்போர்
- ஓசுநர் – எண்ணெய் விற்போர்
- மண்ணுள் வினைஞர் – ஓவியர்
- மண்ணீட்டாளர் – சிற்பி
- கிழி – துணி
II. இலக்கணக் குறிப்பு
- வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
- பயில்தொழில் – வினைத்தொகை
III. பகுபத உறுப்பிலக்கணம்
மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ
- மயங்கு – பகுதி
- இ(ன்) – இறந்த கால இடைநிலை
- ‘ன்’ – புணர்ந்து கெட்டது.
- ய் – உடம்படு மெய்
- அ – பெயரெச்ச விகுதி
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இளங்கோவடிகள் ____________ சேர்ந்தவர்
விடை : சேர மரபைச்
2. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று ____________
விடை : சிலப்பதிகாரம்
3. சிலப்பதிகாரத்தில் ____________, ____________ உள்ளன
விடை : மூன்று காண்டங்கள், முப்பது காதைகள்
4. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ____________
விடை : மணிமேகலை
5. சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ____________
விடை : காண்டம்
6. சிலப்பதிகாரம் ____________ பற்றிய செய்திகளைக் கூறுகிறது
விடை : மூவேந்தர்களின்
1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் மூன்று.
No comments:
Post a Comment