Sunday, September 11, 2022

பெருமாள் திருமொழி

பெருமாள் திருமொழி

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
  • இதில் 105 பாடல்கள் உள்ளன.
  • இதனைப் பாடியவர் குலசேகராழ்வார்.
  • இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
  • வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.
  • குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்ய வந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.

I. சொல்லும் பொருளும்

  • சுடினும் – சுட்டாலும்
  • மாளாத – தீராத
  • மாயம் – விளையாட்டு

II. பலவுள் தெரிக

1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

  1. குலசேகராழ்வாரிடம் இறைவன்
  2. இறைவனிடம் குலசேகராழ்வார்
  3. மருத்துவரிடம் நோயாளி
  4. நோயாளியிடம் மருத்துவர்

விடை : இறைவனிடம் குலசேகராழ்வார்

 

I. இலக்கணக் குறிப்பு

  • மீளாத்துயர் – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
  • அறுத்து – வினையெச்சம்
  • ஆளா உனதருளே – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்

II. பலவுள் தெரிக

1. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

  1. 120
  2. 115
  3. 110
  4. 105

விடை : 105

2. பெருமாள் திருமொழியைப் பாடியவர்

  1. நம்மாழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. குலசேகர ஆழ்வார்
  4. ஆண்டாள்

விடை : குலசேகர ஆழ்வார்

3. குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்

  1. எட்டாம் நூற்றாண்டு
  2. ஏழாம் நூற்றாண்டு
  3. ஆறாம் நூற்றாண்டு
  4. ஐந்தாம் நூற்றாண்டு

விடை : எட்டாம் நூற்றாண்டு

4. மாயம் என்பதன் பொருள்

  1. அறியாமை
  2. நிலையாமை
  3. வினோதம்
  4. விளையாட்டு

விடை : விளையாட்டு

5. சங்க கால இலக்கியங்களில் நிறைந்துள்ளவை

  1. அறிவியல் கருத்துகள்
  2. அறியாமை
  3. மூட நம்பிக்கை
  4. பொய்மை

விடை : அறிவியல் கருத்துகள்

6. தமிழர்,பண்டைய நாளிலிருந்தே அறிவியிலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

  1. அறியாமை
  2. நிலையாமை
  3. வினோதம்
  4. விளையாட்டு

விடை : விளையாட்டு

 


 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms