Monday, September 12, 2022

சங்க இலக்கியத்தில் அறம்

சங்க இலக்கியத்தில் அறம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மேன்மை தரும் அறம் என்பது………………
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது.
இ) புகழ் கருதி அறம் செய்வது.
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.
Answer:
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது.

Question 2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………………….
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
Answer:
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..
அ) அறநெறிக் காலம்
ஆ) மன்னர் காலம்
இ) பக்திக் காலம்
ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்
Answer:
அ) அறநெறிக் காலம்

Question 2.
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் ………………….
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Answer:
ஆ) ஆர்னால்டு

Question 3.
சங்கப் பாடலில் அறம் பற்றிய கருத்துகள் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்படுகிறது?
அ) வீரர்களை
ஆ) மக்களை
இ) அமைச்சர்களை
ஈ) அரசர்களை
Answer:
ஈ) அரசர்களை

Question 4.
மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) பரிபாடல்
ஈ) மதுரை மும்மணிக்கோவை
Answer:
ஆ) மதுரைக்காஞ்சி

Question 5.
உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்………………………
அ) ஈழத்துப் பூதன் தேவனார்
ஆ) நக்கீரர்
இ) திருமுடிக்காரி
ஈ) கபிலர்
Answer:
அ) ஈழத்துப் பூதன் தேவனார்

Question 6.
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) கலித்தொகை

Question 7.
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………………………
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Answer:
ஈ) பரணர்

Question 8.
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) பெரும்பதுமனார்

Question 9.
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………………….
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Answer:
ஆ) தாவோவியம்

Question 10.
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ………………….
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Answer:
இ) நற்றிணை

Question 11.
நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?
அ) மூளை
ஆ) நாக்கு
இ) கண்
ஈ) கை
Answer:
ஆ) நாக்கு

Question 12.
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) பதிற்றுப்பத்து

Question 13.
தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்
அ) கம்ப ர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
ஆ) கபிலர்

Question 14.
பின்வரும் புலவர்களையும், மன்னர்களையும் சரியான இணையாகப் பொருத்துக.
அ) நக்கீரர் – 1. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ) ஔவையார் – 2. பெருஞ்சாத்தன்
இ) கபிலர் – 3. அதியன்
ஈ) நச்செள்ளையார் – 4. திருமுடிக்காரி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 3, 4, 1
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 4, 1

Question 15.
இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

Question 16.
காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.
அ) தர்மர்
ஆ) கன்பூசியஸ்
இ) போதி தர்மர்
ஈ) புத்தர்
Answer:
இ) போதி தர்மர்

Question 17.
போதி தர்மருக்குக் கோயில் கட்டியவர்கள் ………………….
அ) சீனர்கள்
ஆ) ஜப்பானியர்
இ) கிரேக்கர்
ஈ) புத்தர்
Answer:
அ) சீனர்கள்

Question 18.
சமூகக் கடலின் ஒரு துளி ………………….
அ) பறவைகள்
ஆ) விலங்குகள்
இ) மரங்கள்
ஈ) மனிதன்
Answer:
ஈ) மனிதன்

Question 19.
சொற்றொடர்களை முறைப்படுத்துக.
i) செய்ய வெறுத்தனர்
ii) பழிதரும் செயல்களை
iii) பரிசாகக் கிடைத்தாலும்
iv) உலகே
அ) (iv)-(iii)-(ii)-(i)
ஆ) (iii)-(iv)-(i)-(ii)
இ) (ii)-(i)-(iv)-(iii)
ஈ) (i)-(iv)-(iii)-(ii)
Answer:
அ) (iv)-(iii)-(i)-(i)

Question 20.
பொருத்துக.
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ) பேகன்
3. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ) மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ) அதியன்
அ) 1.அ 2.ஆ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ)1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 21.
பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
தவறான சொற்றொடரைக் கண்டறிக.
அ) நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல்.
ஆ) நாக்கு இன்பத்தின் கதவைத் திறப்பது.
இ) நாக்கு துன்பத்தின் கதவைத் திறப்பது.
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
Answer:
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

Question 23.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Answer:
அ) அமைச்சர்கள்

Question 24.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) மாங்குடி மருதனார்

Question 25.
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) ஆவூர் மூலங்கிழார்

Question 26.
குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்
Answer:
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

Question 27.
‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல் – ………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
Answer:
அ) புறநானூறு

Question 28.
தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Answer:
அ) உறையூர்

Question 29.
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) நல்வேட்டனார்

Question 30.
சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ………………….
அ) உதவி
ஆ) கொடை
இ) வாய்மை
ஈ) பொருள்
Answer:
இ) வாய்மை

Question 31.
ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) நற்றிணை
Answer:
அ) கலித்தொகை

Question 32.
செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறநானூறு

 

 

No comments:

Post a Comment

கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

 கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்