Monday, September 12, 2022

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது.

’’உனக்குப் படிக்கத் தெரியாது’’ என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது.

உலகெங் கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்.

இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை ’’உனக்குப் படிக்கத் தெரியாது’’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன்.

இவரின் இயற்பெயர் வே.குணசேகரன்.

வயதுவந்தோர் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

கொற்கை அமைந்துள்ள மாவட்டம் ……………………

  1. திருநெல்வேலி
  2. கன்னியாகுமரி
  3. மதுரை
  4. தூத்துக்குடி

விடை : தூத்துக்குடி

 

அயோத்திதாசர்

  • 20.5.1845ல் கோவை அரசம்பாளையத்தில் பிறந்தார்.
  • இயற்பெயர் : காத்தவராயன்
  • தந்தை : கந்தசாமி
  • தன் ஆசிரியர் மீதுள்ள பற்றின் காரணமாக அவர் பெயராகிய அயோத்திதாசர் என்பதைத் தன் பெயராக மாற்றிக்கொண்டார்.

 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரி மெக்லியோட் பெத்யூன் ………………………..உருவாக்கிடக் காரணமானது.
அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை
ஆ) தெருமுனையில் ஒரு கல்லூரியை
இ) மக்கள் கூடுமிடத்தில் ஒரு சமுதாயக் கூடத்தை
ஈ) கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான பள்ளியை
Answer:
அ) குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை

Question 2.
மேரி மெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த
விதங்கள்………
i) சமையல் செய்து
ii) தோட்டமிட்டு
iii) பொது இடங்களில் பாட்டுப் பாடி
iv) பிச்சையெடுத்து
அ) i, ii, iii – சரி
ஆ) ii, iii, iv – சரி
இ) நான்கும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
அ) i, ii, iii – சரி

Question 3.
அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன் – சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்.
அ) உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட
ஆ) கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட
இ) மறுமணம் மறுக்கப்பட்ட
ஈ) உழைக்கும்
Answer:
அ) உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட

Question 4.
மேரி மெக்லியோட் பெத்யூன் என்னும் அமெரிக்கக் கல்வியாளரின், வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர்
அ) அகிலன்
ஆ) கமலாலயன்
இ) கீதாலயன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) கமலாலயன்

Question 5.
கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்
அ) திருநெல்வேலி
ஆ) மதுரை
இ) தூத்துக்குடி
ஈ) குமரி
Answer:
இ) தூத்துக்குடி

Question 6.
“கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்று குறிப்பிடும் நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) நற்றிணை
Answer:
இ) ஐங்குறுநூறு

 

 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms