Friday, September 9, 2022

உரைநடையின் அணிநலன்கள்

உரைநடையின் அணிநலன்கள்

எழில்முதல்வன் எழுதிய ‘புதிய உரைநடை’ என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது. 

மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.

குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர்.

மரபுக் கவிதை , புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர்.

இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்.

புதிய உரைநடை’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை

“வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”

சிலப்பதிகாரம், காடுகாண் காதை: 53-55

 

1. ஆசிரியப்பா இயற்றுபவர் _______________

விடை : குன்றூர்க் கிழார்

2. குறிஞ்சிப்பாட்டினை எழுதியவர் _______________

விடை : கபிலர்

3. குறிஞ்சிமலர் நூலின் ஆசிரியர் _______________

விடை : நா.பார்த்தசாரதி

4. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் _______________ என்கிறோம்.

விடை : ‘இணை ஒப்பு’ (analogy)

5. இரா.பி.சே எழுதிய நூல் _______________

விடை : தமிழின்பம்

6. கலப்பில்லாத பொய் _______________ என்கிறோம்

விடை : சொல்முரண் (Oxymoron)

 

பலவுள் தெரிக

Question 1.
முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 1983
ஆ) 1938
இ) 1893
ஈ) 1980
Answer:
அ) 1983

Question 2.
முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்
அ) திருவள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) அகத்தியர்
ஈ) கம்ப ர்
Answer:
அ) திருவள்ளுவர்

Question 3.
புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
அ) க. அப்பாதுரை
ஆ) எழில் முதல்வன்
இ) பாவாணர்
ஈ) இளங்குமரனார்
Answer:
ஆ) எழில் முதல்வன்

Question 4.
எழில் முதல்வனின் இயற்பெயர்
அ) மா. இராமலிங்கம்
ஆ) க. அப்பாதுரை
இ) பாவாணர்
ஈ) இளங்குமரனார்
Answer:
அ) மா. இராமலிங்கம்

Question 5.

எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
அ) புதிய உரைநடை
ஆ) இனிக்கும் நினைவுகள்
இ) யாதுமாகி நின்றாய்
ஈ) எங்கெங்கு காணினும்
Answer:
அ) புதிய உரைநடை

Question 6.
எழில் முதல்வன் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்ட கல்லூரி
அ) புதுக்கல்லூரி
ஆ) மாநிலக் கல்லூரி
இ) இராணி மேரிக்கல்லூரி
ஈ) குடந்தை அரசு ஆடவர் கல்லூரி
Answer:
ஆ) மாநிலக் கல்லூரி

Question 7.
சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?
அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) உரைநடை இலக்கியம்
ஈ) சிற்றிலக்கியம்
Answer:
இ) உரைநடை இலக்கியம்

Question 8.
“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர்
அ) தொல்காப்பியர்
ஆ) பவணத்தியார்
இ) தண்டி
ஈ) அகத்தியர்
Answer:
இ) தண்டி

Question 9.
“இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்” என்று குறிஞ்சிமலர் நூலில் நா. பார்த்தசாரதி பயன்படுத்திய நயம்
அ) உவமை
ஆ) உருவகம்
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) சிற்றிலக்கியம்
Answer:
அ) உவமை

Question 10.
எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை எப்படி அழைப்பர்?
அ) இலக்கணை
ஆ) இணை ஒப்பு
இ) முரண்படு மெய்ம்மை
ஈ) சொல்முரண்
Answer:
ஆ) இணை ஒப்பு

Question 11.
குடிசையின் ஒருபக்கம் கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச் சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக் கூடுகள் ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம் – தோழர் ப. ஜீவானந்தம் உரைநடை எதற்கு எடுத்துக்காட்டு?
அ) எதிரிணை இயைபு
ஆ) முரண்படு மெய்ம்மை
இ) இலக்கணை
ஈ) சொல்முரண்
Answer:
அ) எதிரிணை இயைபு

Question 12.
உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றிபெறுவன?
அ) உவமையை விட உருவகமே
ஆ) உருவகத்தை விட உவமையே
இ) எதுகையை விட மோனையே
ஈ) கேள்வியிலே பதில் இருப்பது போல
Answer:
அ) உவமையை விட உருவகமே

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms