7th Std Social Science Term 3 Solution | Lesson.7 பெண்கள் மேம்பாடு
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?
- மோசமான பேறுகால ஆரோக்கியம்
- ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
- எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுதல்
- பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்
விடை : ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
2. பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
- பெண்குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
- அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்,
- மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
- வளர்ந்த நாடுகள் மட்டும் மதிப்பீடு
விடை : அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்,
3. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
- பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
- பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
- மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
- மேலே உள்ள அனைத்தும்
விடை : மேலே உள்ள அனைத்தும்
4. வளரும் நாடுகளில் சிறுவர்களைவிட பெண்குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவற விடுவது ஏன்?
- பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
- பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
- குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
- மேலே உள்ள அனைத்தும்
விடை : பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் _______________ 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்
விடை :சாவித்திரிபாய் பூலே
2. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் ____________
விடை : சுஷ்மன் ஸ்வராஜ்
3. முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ______________ ஆவார்
விடை :காஞ்சன் செளத்ரி பட்டாச்சாரியா
4. புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் _____________.
விடை : அருந்ததி ராய்
III.பொருத்துக
1. சிரிமாவோ பண்டாரநாயக | இங்கிலாந்து |
2. வாலென்டினா தெரோஷ்கோவா | ஜப்பான் |
3. ஜன்கோ தபே | இலங்கை |
4. சார்லோட் கூப்பர் | சோவியத் ஒன்றியம் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ |
IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க.
1. கூற்று : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.
காரணம் : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு
- கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
2. கூற்று : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது
கூற்று : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண்சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு
- கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
No comments:
Post a Comment