இலக்கணம் – பொது
I. கீழ்காணும் தொடர்களின் வழுவமைதி வகைகளை இனம் கண்டு எழுதுக.
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்
- காலவழுவமைதி
ஆ) அவனும் நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்தமாகுங்கள்
- இடவழுவமைதி
இ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினார் –
- இடவழுவமைதி
ஈ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்
- மரபுவழுவமைதி
உ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்
- திணைவழுவமைதி
II. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக
1. தந்த “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?” என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக.)
- தந்தை மகளே உன்னுடைய தோழி அழகியை அழைத்துவா என்று சொன்னார்
2. அக்கா நேற்று வீட்டுக் வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக.)
- அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும் போது அம்மா வழியனுப்பினாள்.
3. “இதோ முடித்து விடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக.)
- இதோ முடித்தேன் என்று சொல்லை செயலை முடிக்கும் முன்பே கூறினார்
4. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்திைய இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக.)
- என்னிடமோ உன்னிடமோ அவன் செய்தியை இன்னும் கூறவில்லை
- உன்னிடமோ என்னிடமோ அவன் செய்தியை இன்னும் கூறவில்லை
- அவன் என்னிடமோ உன்னிடமோ செய்தியை இன்னும் கூறவில்லை
5. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக.)
- குழந்தை அழுகிறது பார்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
Answer:
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதிகூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) தன்மை வினைகள் – 1. நடந்தாய், வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் – 2. நீர், நீங்கள்
இ) படர்க்கை வினைகள் – 3. வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலை பெயர்கள் – 4. வந்தான், சென்றான்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 3, 1, 4, 2Question 2.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மருதன் – 1. பலர்பால்
ஆ) பெண்கள் – 2. ஒன்றன்பால்
இ) யானை – 3. ஆண்பால்
ஈ) பசுக்கள் – 4. பலவின்பால்
அ) 4, 3, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 3, 1, 2, 4Question 3.
பால் என்பது ……………. உட்பிரிவு ஆகும்.
அ) திணையின்
ஆ) திணையின்
இ) காண்டத்தின்
ஈ) படலத்தின்
Answer:
ஆ) திணையின்Question 4.
உயர்திணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்றுQuestion 5.
அஃறிணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டுQuestion 6.
இடம் ……………….. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
Answer:
ஆ) மூன்றுQuestion 7.
பொருத்திக் காட்டுக.
i) நான், யான், நாம், யாம் – 1. தன்மை வினைகள்
வந்தேன், வந்தோம் – 2. தன்மைப் பெயர்கள்
iii) நீ, நீர், நீவிர், நீங்க ள் – 3. முன்னிலை வினைகள்
iv) நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் – 4. முன்னிலைப் பெயர்கள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3Question 8.
பொருத்திக் காட்டுக.
i) அவன் – தன்மை வினை
ii) பறந்தன – 2. முன்னிலை வினை
iii) நடந்தாய் – 3. படர்க்கை வினை
iv) வந்தேன் – 4. படர்க்கைப் பெயர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1Question 9.
பொருத்திக் காட்டுக.
i) செழியன் வந்தது – 1. கால வழு
ii) கண்ண கி உண்டான் – 2. இட வழு
iii) நீ வந்தேன் – 3. பால் வழு
iv) நேற்று வருவான் – 4. திணை வழு
அ) 4,3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4,3, 2, 11Question 10.
ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது……………….. வழு.
அ) விடை
ஆ) வினா
இ) மரபு
ஈ) கால
Answer:
ஆ) வினாQuestion 11.
கண்ணன் எங்கே இருக்கிறார் என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று கூறுவது ……………. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
இ) விடைQuestion 12.
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ……………….. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
ஈ) மரபுQuestion 13.
பொருத்திக் காட்டுக.
i) என் அம்மை வந்தாள் – 1. பால் வழுவமைதி
ii) கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் – 2. கால வழுவமைதி
iii) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – 3. மரபு வழுவமைதி
iv) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது – 4. திணை வழுவமைதி
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1Question 14.
மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ………………
அ) பால் வழுமமைதி
ஆ) திணை வழுவமைதி
இ) இட வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
Answer:
இ) இட வழுவமைதிQuestion 15.
பொருத்துக.
1. வீரன், அண்ணன், மருதன் – அ) பெண்பால்
2. மகள், அரசி, தலைவி – ஆ) பலர்பால்
3. மக்கள், பெண்கள், ஆடவர் – இ) ஒன்றன்பால்
4. யானை, புறா, மலை – ஈ) ஆண்பால்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
விடை :
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இQuestion 16.
பொருத்துக.
1. நீ வந்தேன் – அ) இட வழாநிலை
2. நீ வந்தாய் – ஆ) இட வழு
3. நேற்று வருவான் – இ) கால வழாநிலை
4. நேற்று வந்தான் – ஈ) கால வழு
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இQuestion 17.
பொருத்துக.
1. என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது – அ) பால் வழுவமைதி
2. வாடா இராசா, வாடா கண்ணா என மகளைத் தாய் அழைப்பது – ஆ) இடவழுவமைதி
3. இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இ) கால வழுவமைதி
4. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – ஈ) திணைவழுவமைதி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
No comments:
Post a Comment