Monday, July 19, 2021

அன்னை மொழியே - விடைக்குறிப்புகள்

விடைக் குறிப்புகள்


                                            பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
விடை:
இ) எம் + தமிழ் + நா

குறுவினா

1. “மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • சீவக சிந்தாமணி,
  • வளையாபதி,
  • குண்டலகேசி
    இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.

 

சிறுவினா

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
விடை:

"அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

          முன்னைக்கும் முன்னை முகிழ்த்த் நறுங்கனியே!"

  • அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
  • குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
  • பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
  • பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகானமணிமேகலையே!
  • கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
  • பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்.

                                "முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே"

நெடுவினா

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
விடை:


கற்பவை கற்றபின்

 1. “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை”
இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.
விடை:
1. நற்றிணை = நல் + திணை
தொகை நூல்களுள் முதல் நூல். நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்.

2. குறுந்தொகை:
நல்ல குறுந்தொகை எனவும் அழைக்கப்படும். குறைந்த அடியளவால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆதலால் குறுந்தொகை என அழைக்கப்பட்டது.

3. ஐங்குறுநூறு:
ஐந்திணைகளைப் பாடும் நூல். குறுகிய பாடலடிகள் கொண்ட நூல்.

4. பதிற்றுப்பத்து:
சேர அரசர்கள் பத்துப் பேரை 10 புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடியது பதிற்றுப்பத்து.

5. பரிபாடல்:
இது அகம், புறம் சார்ந்த நூல். தமிழின் முதல் இசைப்பாடல் நூல். வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களாலும், பலவகையான அடிகளாலும் பாடப்பட்டுள்ளது.

6. கலித்தொகை:
ஐந்திணையும் ஐவரால் கலிப்பாவில் அமைந்த நூல். கலிப்பாவின் ஓசை துள்ளல் ஓசை. ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ எனவும் கூறப்படுகிறது.

7. அகநானூறு :
அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது. களிற்றியானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளைக் கொண்டது.

8. புறநானூறு:
புறம் சார்ந்த நூல். 400 பாடல்களை உடையது. தமிழரின் வரலாற்றுப்பெட்டகம். இது பழந்தமிழரின்
வீரம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், கொடை ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.

2. “எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்துநிமிட உரை நிகழ்த்துக.
விடை:
வணக்கம்!
தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். தமிழின் பழமையையோ அல்லது அதன் பெருமையையோ வேறு எம்மொழியும் நெருங்கவியலாது. தமிழ்மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கெனத் தனிநோக்கும் போக்கும் கொண்டுள்ளது. “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” மாக்சு முல்லர் என்னும் மொழி நூலறிஞர் தமிழ்மொழியைச் சிறப்பித்துள்ளார்.

நிறைவாக, தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழர்களாகிய நமது கடமையாகும். இதனை உணர்ந்து தமிழின் சீரிளமையைக் காக்க என்றும் பாடுபடுவோம்.


                நன்றி                 வணக்கம்!!

      ஆன்லைன் தேர்வு

No comments:

Post a Comment

10th English Special One Word Test - Nagapattinam District

0th English Special One Word Test - Nagapattinam District