Wednesday, July 28, 2021

12th - இளந்தமிழே- விடைகள்

பாடநூல் வினாக்கள்

    சரியான விடையினைத் தேர்வு செய்க

    1. “மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம், 

    க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

    உ) பொதிகையில் தோன்றியது

    ங) வள்ளல்களைத் தந்தது

    அ) க மட்டும் சரி

    ஆ) க, உ இரண்டும் சரி

    இ) ந மட்டும் சரி

    ஈ) க, ங இரண்டும் சரி

    விடை:

    ஈ) க, ங இரண்டும் சரி

    குறுவினா

    1.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

    விடை:

    செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.

    சிறுவினா

    1.செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

    விடை:

    கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை. ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலை முகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார். கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

    2. பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

    பழையன கழிதலும் புதுயன புகுதலும்
    வழுவல கால வகையி னானெ- நன்னூல்
    மீண்டுமந்த பழமை நலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா, வா!- சிற்பி பாலசுப்பிரமணியம்
    நன்னூல்சிற்பி பால சுப்பிரமணியம்
    பழையவற்றை ஒதுக்கி புதியவற்றை புகுத்தல் வேண்டும்பழைமை செயல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுக்க வேண்டும்.
    தேவையற்ற சொல், பொருள் வழக்கம் எலாம் காலமாறுதலுக்கு ஏற்ப புதுய சொல், பொருள், வழக்கம் தேவை.தமிழ்த்தாயின் பழமைமிகு செயல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து தமிழ்க்குயிலே மெய்சிலிர்க்குமாறு பாட வா.

    நெடுவினா

    1.தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

    விடை:இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.

    • செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
    • உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது.
    • இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
    • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
    • தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
    • பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
    • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
    • கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
    • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.

    இலக்கணக் குறிப்பு

    • செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் – பண்புத்தொகைகள்
    • முத்து முத்தாய் – அடுக்குத்தொடர்
    • சிவந்து – வினையெச்சம்
    • வியர்வை வெள்ளம் – உருவகம்


    உறுப்பிலக்கணம்
    சாய்ப்பான் = சாய்+ப்+ப்+ஆன்
    சாய்= பகுதி
    ப்= சந்தி
    ப்=எதிர்கால இடைநிலை
    ஆன்= படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
    விம்முகின்ற=விம்மு+கின்று+அ
    விம்மு= பகுதி
    கின்று-நிகழ்கால இடைநிலை
    அ-பெயெரெச்ச விகுதி
    வியந்து= விய+த்(ந்)+த்+உ
    விய-பகுதி
    த்(ந்)-சந்தி, (ந்) ஆனது விகாரம்)
    த்- இறந்தகால இடைநிலை
    உ- வினையெச்ச விகுதி
    இருந்தாய்= இரு+த்(ந்)+த்+ஆய்
    இரு- பகுதி
    த்(ந்) - சந்தி, (ந்) ஆனது விகாரம்)
    த்- இறந்தகால இடைநிலை
    ஆய் - முன்னிலை ஒருமைசந்தி, (ந்) ஆனது விகாரம்)
    த்- இறந்தகால இடைநிலை
    வினைமுற்று விகுதி

    புணர்ச்சி விதி

    1. செம்பரிதி = செம்மை + பரிதி

    ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + பரிதி என்பது செம்பரிதி எனப் புணர்ந்தது.

    2. வானமெல்லாம் = வானம் + எல்லாம்

    உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + எ = மெ) வானெமல்லாம் எனப் புணர்ந்தது.

    3. உன்னையல்லால் = உன்னை + அல்லால்

    இஈஐ வழி யவ்வும் என்ற விதிப்படி, உன்னை + ய் + அல்லால் என்றானது. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ய் + அ = ய) உன்னையல்லால் எனப் புணர்ந்தது.

    4. செந்தமிழே = செம்மை + தமிழே ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + தமிழே என்றானது. முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, (ம் திரிந்து ந் தோன்றி), செந்தமிழே எனப் புணர்ந்தது.

    12th தமிழ் ஆன்லைன் தேர்வு

     

    No comments:

    Post a Comment

    Tn Election Filled Forms

    Tn Election Filled Forms