Friday, October 9, 2020

அப்துல் கலாம்

 இது கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்காக கொடுக்கப்பட்டுள்ளது

                                                அப்துல் கலாம்

முன்னுரை

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

 

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்.

அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.

தொடக்க வாழ்க்கையும் கல்வியும்

கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால், இளம் வயதிலேயே, இவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும் இவர் சித்தரிக்கப்படுகிறார்.

கல்வி

இராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளன் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். பின்னர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.

எதிர்கால இந்தியா: 2020

அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.

 

அறிவியலாலோசகர் பதவியிலிருந்து 1999 இல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.

அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.

கலாம் எழுதிய புத்தகங்கள்

  •  Turning Points; A journey through challenges 2012.
  •   Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.

  •     இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.

  •     Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.

  •     The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.

  •     Mission India (திட்டம் இந்தியா) ; ஏ.பீ.ஜே. அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.

  •     Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.

  •     Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.

  •     (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.

  • மறைவு

    சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.


 

 

 

No comments:

Post a Comment

கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்

 கட்டுரைப் போட்டி- காலநிலை மாற்றத்தினால் என்னுடைய வாழ்வில் மற்றும் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள்