Tuesday, October 13, 2020

2020 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்


2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு


இயற்பியலுக்கான நோபல் பரிசு 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு கருந்துளைகள் உருவாதல் சாத்தியம் என்பதை நிரூபணம் செய்ததற்காக ரோஜர் பென்ரோஸ், இரைனாடு கென்செல் மற்றும் ஆந்திரியா கியேசு ஆகியோருடன் இணைந்து 2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ரியா மியா கியேஸ்

இயற்பியல் நோபல் பரிசினைப் பெறும் நான்காவது பெண் இவராவார். நம் பால்வழியின் விண்மீன் பேரடையின் நடுவே கருந்துளை எனப் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மீப்பெரும் இறுக்கமான பொருளைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் 


 மரபணுத்தொகுதியை துல்லியமாக நறுக்கிப்பிணைக்கும் கிரிசிப்பர் (CRISPR/Cas9) நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக  எமானுவேல் சார்ப்பெந்தியே செனிபர் தௌதுனா ஆகியோர் பெற்றனர்.
 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 

 

கல்லீரல் அழற்சி தீநுண்மி சி-யைக் கண்டுபிடித்தமைக்காக மைக்கேல் ஆட்டன் (Michael Houghton), ஆர்வி சேம்சு ஆலதர் (Harvey James Alter), சார்லசு எம். ரைசு (Charles M. Rice ) ஆகியோர் பெற்றனர். 
 

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

 

இலூயிசு எலிசபெத்து கிளிக்கு (Louise Elisabeth Glück) அமெரிக்கக் கவிஞர் , கட்டுரையாளர் மற்றும் மொழிப் பேராசிரியருக்கு வழங்கப்பட்டது.
  

பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான நிலைமைகளை மேம்படுத்துவதில் அதன் பங்களிப்புகளுக்காகவும், போர் மற்றும் ஆயுத மோதல்களில் பட்டினியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு உந்து சக்தியாக செயல்பட்டதற்காகவும் ஐநாவின் உலக உணவுத் திட்டத்திற்கு 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பொருளியலுக்கான நோபல் பரிசு 



அக்டோபர் 2020 இல், ராயல் சுவீடிய அறிவியல் உயர்கழகம் (அகாதமி ஆஃப் சயின்சஸ்), மில்கிரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு கூட்டாக நோபல் நினைவு பரிசை வழங்கியதாகக் கூறியது, ஏனெனில் அவர்கள் "பாரம்பரிய வழிகளில் அதாவது, வானொலி அதிவெண்கள் மூலமாக விற்கக் கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்களை வடிவமைக்க தங்கள் நுண்ணறிவினை பயன்படுத்தினர் எனக் கூறியுள்ளது. இவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயனளித்துள்ளன.

 

 


No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms